Tuesday, February 25, 2014

பாசக்கார மனைவி....






டாக்டர் கணவன் உடம்பை சோதித்துவிட்டு - "இன்னும் 8 மணி நேரம் தான் நீங்கள் உயிரோடு இருப்பீர்கள், அதற்குள் உங்களுக்கு பிடித்தமான விஷயங்கள் எல்லாத்தையும் செஞ்சிக்குங்க...."

மாலை 5 மணி : கண்ணீர் மல்க விஷயத்தை மனைவியிடம் பகிர்ந்தான் கணவன். துடித்தாள் அவள்.

எனக்கு உன் கையால வெங்காய தோசையும், கட்டி சட்னியும் செஞ்சி குடும்மா, இன்னும் 7 மணி நேரம் தான் பாக்கியிருக்கு.

மாலை 7 மணி : ராத்திரி சாப்பாட்டுக்கு மீன் குழம்பு வச்சி குடும்மா, இன்னும் 5 மணி நேரம் தான் நான் இருப்பேன்...

இரவு 10 மணி : நல்ல பசும்பால்ல, உங்கையால சொஞ்சமா சக்கர போட்டு எனக்கு குடும்மா..இன்னும் மூணு மணி நேரம் தான் இருக்கு....!!!

இரவு 12 மணி : தூங்கும் மனைவியை எழுப்புகிறான்.

அவள் : பேசாம படுங்க...காலைல எழுந்தவுடன் ஆயிரம் வேல இருக்கு. சொந்தகாரங்களுக்கு சொல்லி அனுப்பனும், ஐயருக்கு ஏற்பாடு பண்ணனும், சுடுகாட்ல புக் பண்ணனும்.....
உங்களுக்கு காலைல எழுந்திருக்கிற வேலை கூட இல்ல.....!!! 

Sunday, February 23, 2014

நம்ம பட்டிக்காட்டான்

ஒரு நாள் நம்ம பட்டிக்காட்டான், சின்னதா ஒரு டிவி வாங்கனும்ன்னு ஆசை பட்டு, எலக்ட்ரானிக்ஸ் கடைக்கு போயிருக்கார். கடைகாரனைப் கூப்பிட்டு ஒரு சின்ன டிவியை காண்பிச்சு கேட்டார்.

"இந்த டிவி என்ன விலை?"
கடைகாரன் பட்டிக்காட்டானை ஏற இறங்க பார்த்துட்டு சொன்னான்

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

எப்படியும் இந்த டிவியை வாங்கிடனும்னு, விட்டுக்கு போய் தன்னோட கெட்அப்பை மாதிக்கிட்டு வந்து ‌கடைகாரனைப் பார்த்து கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..." ம‌றுப‌டியும் அதையே க‌டைகார‌ன் சொல்ல‌, டென்ஷனான பட்டிக்காட்டானுக்கு என்ன செய்றதுன்னு தெரியலை. ந‌ம்ம திருட்டு முழி தான் இவனுக்கு காட்டிகுடுக்குதுன்னு நினைச்சு, அடுத்த முறை போகும் போது, கூலிங்கிளாஸ் போட்டுக்கிட்டு, ஒட்டு மொத்த கெட்அப்பும் மாத்திக்கிட்டு கடைக்கு போய் கேட்டார்,

"இந்த டிவி என்ன விலை?"

"ஒரு தடவை சொன்னா புரியாது? இந்த கடையில பட்டிக்காட்டானுக்கெல்லாம் டிவி விக்கறதில்லை..."

பட்டிக்காட்டானால‌் பொறுக்க‌ முடிய‌லை, கடைகாரன்கிட்ட பரிதாபமா கேட்டார்,

"டிவி குடுக்க‌லைன்னா ப‌ர‌வாயில்லை, அட்லீஸ்ட், நான் பட்டிக்காட்டான் தான்னு எப்ப‌டி க‌ண்டுபிடிச்சே சொல்லு?"

கடைகாரன் சிரிச்சிக்கிட்டே சொன்னான், "இது டிவி இல்லை, மைக்ரோஓவ‌ன் அதான்" 

வயர்லெஸ் தொழில்நுட்பம்

அமெரிக்கர்கள் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் மின்சார கேபிள்கள்
கிடைத்தன. உடனே அவர்கள்
அறிவித்தார்கள், “எங்களது முன்னோர்கள்
மின்சாரத்தை பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே பயன்படுத்தி உள்ளார்கள்.”

இரஷ்யர்கள் அவர்கள் நாட்டில் பூமிக்குக்
கீழே தோண்டிக்கொண்டு போனார்கள். 500
அடி ஆழத்தில் டெலிபோன் கேபிள்கள்
கிடைத்தன. அவர்கள் சொன்னார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே டெலிபோனை பயன்படுத்தியுள்ளார்கள்”

இலங்கையர்களும்  தோண்டினார்கள். 1000
அடி தாண்டியும் ஒன்றும்
கிடைக்கவில்லை.
உடனே அறிவித்தார்கள்,
“எங்களது முன்னோர்கள் அந்தக் காலத்திலேயே வயர்லெஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளார்கள்” என்று.. 


எப்புடி!!!!!!!!!!!!!!!!!!!!

Tuesday, February 18, 2014

10 நிமிடத்தில் 50 இட்லி

' நம்ம ராமசாமி' ஓரு ஹோட்டல் அறிவிப்பை பார்த்தார்...

10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டால் 1000 ரூ பரிசு எனப்போட்டிருந்தது...

ராமசாமி ''நான் ரெடி..பணம் கட்டாயம் தருவீர்களா.''.கடைகராரை கேட்டார்..

''கட்டாயம் தருவோம் ''என்றார் கடைகார.ர்

'''பத்து நிமிடத்தில் வந்துவிடுகிறேன் 'என்று சென்றுவிட்டு திரும்பினார்..

போட்டியில் கலந்து கொண்டு 10 நிமிடத்தில் 50 இட்லி சாப்பிட்டு முடித்துவிட்டார்.

கடைகரா.ர் ஆச்சிரியம் அடைந்துவிட்டார்..

பரிசுதொகை கொடுத்துவிட்டு ''பத்து நிமிடத்தில் போய்மந்திரம் ஏதும் போட்டுவிட்டுவந்தீர்களா ''கேட்டார்..கடைகார.ர்

ராமசாமி சொன்னார்..''10 நிமிட்த்தில் 50 இட்லி சாப்பிடமுடியுமா என்று சாப்பிட்டுபார்த்து.வந்தேன் ....''என்றார்

கடைக்காரர் : ஹான்ன்ன்ன் !!!!!!

டயர் பஞ்சர் ஆயிடுச்சி சார்

ஒரு முறை மூணு பசங்க பரீட்சைக்கு ரொம்ப

லேட்டா வந்தானுங்களாம்..

வாத்தி : ஏன்டா லேட்டு..

பசங்க : சார் , வரும் போது கார் டயர் பஞ்சர்
ஆயிடுச்சி சார்.. தள்ளிகிட்டே வந்தோம் சார்..

அதன் சார் லேட்டு..எங்களை பரீட்சை எழுத

விடுங்க சார்..ப்ளீஸ் சார்..

வாத்தி : சரி..ஆனா வேற கொஸ்டின் பேப்பர்

தான் தருவேன்..நாளைக்கு காலையில வாங்க..

பசங்களை தனித்தனியா ,வேற வேற ரூம்ல

உட்கார வச்சி..

பசங்களுக்கு கேட்கப்பட்ட ஒரே கேள்வி :

காரோட எந்த டயர் பஞ்சர் ஆச்சு..?

1.முன்பக்க வலது டயர்..

2.முன்பக்க இடது டயர்..

3.பின்பக்க வலது டயர்..

4. பின்பக்க இடது டயர்..

நீதி : இதுக்கு பேரு தான் ஆப்பு..

பசங்க எழுதிய பதில்..
.
.
.
.
.
.
.
.
.

5 . ALL THE ABOVE ...
( ஒரு டயர் பஞ்சர் ஆயிருந்தா ஸ்டெப்னி

மாட்டி ஓட்டிகிட்டு வந்து இருப்போம்..

பஞ்சர் ஆனது எல்லா டயரும் தான்.. )

நீதி : இதுக்கு பேரு தான் ரிவிட்டு. 

ஒரு பெண்ணின் சாமர்த்தியம்

ஒரு பெண்ணின் சாமர்த்தியம்

ஒரு ஹெலிகாப்டரில் இருந்து வந்த கயிற்றைப் பிடித்துக் கொண்டு 9 ஆண்களும், 1 பெண்ணும் தொங்கிக் கொண்டிருந்தனர்.

இதில் யாராவது ஒருவர் கையிறை விட்டால் மட்டுமே ஹெலிகாப்டர் மேற்கொண்டு பறக்க முடியும். இல்லை என்றால் கயிறு அறுந்துவிடும்.

இந்த நிலையில், ஹெலிகாப்டரில் இருந்து யாராவது ஒருவர் தனது உயிரை தியாகம் செய்யுமாறு கோரிக்கை குரல் வருகிறது.

ஆனால், ஆண்களில் யாருமே உயிரை தியாகம் செய்ய முன்வரவில்லை.

அந்த சமயத்தில், அவர்களைக் காப்பாற்ற அந்த பெண் தானே முன் வந்து கயிறை விடுவதாகக் கூறுகிறாள்.

அவள் கயிறை விடுவதற்கு முன்பு, என் குடும்பத்துக்காக நிறைய தியாகம் செய்துள்ளேன். அதுபோல் இன்று உங்களுக்காக இந்த தியாகத்தைச் செய்கிறேன் என்று கூறினாள். இதைக் கேட்ட அனைத்து ஆண்களும், தங்களை மறந்து கைதட்டினர்.

பிறகென்ன... அந்த பெண் மட்டும் மீட்கப்பட்டு தனது இடத்தை அடைந்தாள்.

திகில் கதை

 திகில் கதை 
----------------------

ஓகே மணி செரியாக 9 அடிக்க நான்கு நிமிடங்கள் இருக்கிறது வானம் இருளை தழுவிக் கொண்டிருகிறது தனது இரு சக்கர வாகனத்தை எடுத்து கொண்டு அந்த ஆள் நடமாட்டம் இல்லாத ரோடில் செல்கிறான் மனதில் ஒரு படபடப்பு, பயம் அதன் வெளிபாடு அவனது மிதிவண்டியீன் வேகம் அதிகரிக்கிறது 

அந்த சமயம் சற்று தொலைவில் ஒரு புத்தக கடையை பார்க்கிறான் தனது மிதிவண்டியை நிறுத்திவிட்டு சுற்றி பார்க்கிறான் ஒரு மனிதனையும் காணவில்லை கடைக்குள் செல்கிறான் ஒரு 75 வயது மதிகதக்க முதியவர் ஒருவர் இருக்கிறார் அவன் சில புத்தகங்களை பார்க்கிறான் அவன் கண்ணுக்கு அந்த புத்தகம் தென்படுகிறது அதன் அட்டை படத்தை பார்க்கிறான் அதில் ஒரு மனிதன் தனது இதயத்தை கையில் வைத்துக்கொண்டு இருக்கிறான் அதன் மேல் "வாழ்கையின் கடைசி நிமிடம்"

என்று தலைப்பு இருக்கிறது. அந்த புத்தகத்தின் விலையை கேட்கிறான் அதற்கு அந்த முதியவர் 500 ருபாய் என்று சொல்கிறார் மீண்டும் 500 ரூபாயா என்று அவன் கேட்கிறான் தனது சட்டை பையில் இருந்து 500 நோட்டை எடுத்து அந்த முதியவரிடம் கொடுகிறான். அதை பெற்றுக்கொண்டு அந்த புத்தகத்தை அவன் கையில் கொடுக்கிறார் அவனை பார்த்துவிட்டு இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து என்று சொல்கிறார் ஒரு வித பயத்தோடு அந்த புத்தகத்தை பெற்றுக்கொண்டு தனது வீட்டுக்கு செல்கிறான் உள்ளே சென்று கதவை சாற்றிவிட்டு அந்த புத்தகத்தை நாற்காலியில் வைத்துவிட்டு அருகில் உள்ள தனது படுகையில் சாய்கிறான் கண்கள் இருளுகின்றது திடிரென்று கண்விழிக்கிறான் மின் விசிரியின் வேகத்தினால் அருகில் உள்ள மேஜையின் மேல் இருந்த அந்த புத்தகத்தின் பக்கங்கள் வேகமாக புரளுகிறது அவன் மனம் படபடக்கிறது அந்த 75 வயது முதியவர் சொன்ன அந்த வார்த்தை (இந்த புத்தகத்தின் கடைசி பக்கத்தை மட்டும் பார்க்காதே அப்படி பார்த்தால் உன் உயிருக்கு ஆபத்து) அவன் நினைவுக்கு வருகிறது திடிரென்று எழுந்து அந்த புத்தகத்தின் பக்கங்கள் அந்த காற்றில் பறக்காமல் இருக்க அதன் மேல் கை வைகிறான் அது கடைசி பக்கத்தில் நிற்கிறது அவனது இதயம் படபடக்கிறது பயத்தினால் அவனது முகம் வேர்வையில் நனைகிறது சற்று பயத்தை போகிகொண்டவனாய் அந்த பக்கத்தில் இருந்து தனது கையை மெல்ல வீலகி அதை படிக்கிறான்

எழுத்தாளர் - கு.பகவதிநாத்
11thhour பதிபகம், Colombo-11
விலை - 74 ருபாய்

என்று அதில் எழுதி இருக்கிறது அதை பார்த்தவுடன்

ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!
ஹ ஹ ஹ ஹ ஹ ஹ !!!!!!!!

கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் இருந்து பிரகாஸ்ராஜ்

காதலிக்கு காதலன் போன் பண்ணுகிறான் .எதிர்பாராத விதமாக காதலியின் தந்தை போன் எடுக்கிறார் .

அப்பொழுது ........

காதலன் :சார் நான் கோடிஸ்வரன் நிகழ்ச்சியில் இருந்து பிரகாஸ்ராஜ் பேசுகிறேன்
தந்தை : சொல்லுங்க சார்

காதலன் : சார் உங்க பொண்ணோட friend hot சீட்டில் இருக்காங்க .அவங்க உங்க பொண்ணுகிட்ட answer கேட்கனுமாம் .
தந்தை : பொண்ணுகிட்ட போன் கொடுக்கிறேன் :

காதலி :சொல்லுங்க சார்

காதலன் கேள்வி : நாளை எப்ப மீட் பண்ணலாம் OPTION
A:வீட்டில் வச்சு
B :ஸ்கூல் இல் வெச்சி
C:ஸ்கூல் இருந்து வீட்டுக்கு வரும்போது
D:பஸ் ஸ்டாண்ட் வச்சு

காதலி : option....D
காதலன் : option D லாக் பன்னபோறேன்

காதலி : Ok