Monday, September 29, 2014

குட்டிக்கதை: அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், ..

குட்டிக்கதை:
அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.
யானையின் எடையை எப்படி அறிவது.? என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், 'நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.
அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.
எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.
எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

Wednesday, September 24, 2014

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.

நம் உடலுக்கும் கால அட்டவணை உண்டு.
--------------------------------------------------------------
இதை நாம் முறையாகப் பின்பற்றினால் டாக்டரிடம் போக வேண்டிய அவசியமே இல்லை.
இதோ கால அட்ட வணை:
விடியற்காலை 3 முதல் 5 மணி வரை - நுரையீரல் நேரம். இந்த நேரத்தில் தியானம், மூச்சுப் பயிற்சி செய்தால் ஆயுள் நீடிக்கும்.
காலை 5 முதல் 7 வரை பெருங்குடல் நேரம். இந்த நேரத்தில் காலைக்கடன்களை முடிக்க வேண்டும். இதனால் மலச்சிக்கலே ஏற்படாது.
காலை 7 முதல் 9 வரை வயிற்றின் நேரம். இந்த நேரத்தில் சாப்பிடுவது நன்கு ஜீரணமாகும்.
காலை 9 முதல் 11 வரை மண்ணீரல் நேரம். வயிற்றில் விழும் உணவைச் செரிக்கச் செய்யும் நேரம். இந்த நேரத்தில் எதையும் சாப்பிடக் கூடாது. தண்ணீர் கூடக் குடிக்கக் கூடாது.
காலை 11 முதல் 1 வரை இதயத்தின் நேரம். இதய நோயாளிகள் கவனமாக இருக்க வேண்டிய நேரம். சத்தமாகப் பேசுதல், படபடத்தல், கோபப்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.
பிற்பகல் 1 முதல் 3 வரை சிறுகுடல் நேரம். மிதமான சிற்றுண்டியுடன் ஓய்வு எடுக்க வேண்டும்.
பிற்பகல் 3 முதல் 5 வரை சிறுநீர்ப் பையின் நேரம். நீர்க்கழிவுகளை வெளியேற்றச் சிறந்த நேரம்.
மாலை 5 முதல் 7 வரை சிறுநீரகங்களின் நேரம். தியானம், இறைவழிபாடு செய்வதற்கு ஏற்றது.
இரவு 7 முதல் 9 வரை பெரிகார்டியத்தின் நேரம். பெரிகார்டியன் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு. இரவு உணவுக்கேற்ற நேரம்.
இரவு 9 முதல் 11 வரை - உச்சந்தலை முதல் அடிவயிறு வரை உள்ள மூன்று பாதைகள் இணையும் நேரம். அமைதியாக உறங்கலாம்.
இரவு 11 முதல் 1 வரை - பித்தப்பை நேரம். அவசியம் உறங்க வேண்டும்.
இரவு 1 முதல் 3 வரை - கல்லீரல் நேரம். ரத்தத்தை கல்லீரல் சுத்தப்படுத்தும் நேரம். கட்டாயம் தூங்க வேண்டும்.

Thursday, September 4, 2014

தள்ளி விட முடியுமா??????

விடியற்காலை 3 மணி.
மழை வேறு பெய்து கொண்டிருந்தது. ஒரு வீட்டில் கணவன் மனைவி தூங்கிக் கொண்டிருந்தனர். 
அப்போது கதவு தட்டும் சத்தம் கேட்டது.
கணவன் மட்டும் எழுந்து போனான். 
கதவை திறந்தால் அங்கே ஒரு குடிகாரர் நின்று கொண்டிருந்தார்.
சார் ஒரு உதவி.. கொஞ்ச அங்க வந்து தள்ளி விட முடியுமா?
என்று அந்த குடிகாரர் கேட்டார்.
கணவனோ முடியவே முடியாது ஏம்பா விடியகாலை 3 மணிக்கு தொந்தரவு செய்யறேன்னு சொல்லிட்டுகதவை சாத்திட்டு படுக்கப் போய் விட்டான்.
யாரது? என்று மனைவி கேட்டாள்.
எவனோ ஒரு குடிகாரன், வந்து காரோ எதையோ தள்ளி விட முடியுமான்னு கேட்கிறான்
நீங்க உதவி செஞ்சீங்களா?
இல்லை, காலைல 3 மணி, மழை வேற பெய்யுது எவன் போவான்?
பார்த்தீங்களா?
3 மாசம் முன்னாடி நம்ம கார் ரிப்பேராகி நடு ரோட்ல நின்னப்ப இரண்டு பேர் நமக்கு உதவி செஞ்சாங்களே? இப்ப நீங்க அது மாதிரி உதவி செய்யலன்னா எப்படி? கடவுள் குடிகாரர்களையும் நேசிப்பார்
கணவன் எந்திரிச்சான், ட்ரஸ் பண்ணிக்கிட்டு மழையில் நனைஞ்சுகிட்டே வெளியே போனான்.
இருட்டுல, மழையில் சரியா தெரியாதாதால சத்தமா கேட்டான்.
“ஹலோ, நீங்க இன்னும் இருக்கீங்களா?”
“ஆமா சார்”
“ஏதோ தள்ளி விடனும்னு சொன்னீங்களே, இப்ப செய்யலாமா?”
“ஆமா சார் வந்து கொஞ்சம் தள்ளிவிட்டீங்கன்னா நல்லா இருக்கும்”
“எங்கே இருக்கீங்க”
*
*
*
*
*
*
*
“இங்கதான் ஊஞ்சல் மேல உட்கார்ந்திருக்கேன் வாங்க வந்து தள்ளிவிடு.....

Thursday, August 14, 2014

யோகா என்றால் என்ன..?

யோகா,யோகா என்று சொல்கிறார்களே,

யோகா என்றால் என்ன..?

பதில்:

யோகா என்பது உடல் பயிற்சி அல்ல.

உங்கள் உடலை முறுக்கிக் கொள்வது,

மூச்சைப் பிடித்துக் கொள்வது,

தலையில் நிற்பது,

இவையெல்லாம் யோகா அல்ல.

யோகா என்ற வார்த்தைக்கு ஒன்றிணைதல் என்று பொருள்.

அதாவது

உடல்,

மனம்

இவைகளை ஒன்றிணைக்கும் செய்யும் பயிற்ச்சியே யோகா பயிற்ச்சி ஆகும்.

மற்றும்,

யோகா என்றால்,

நம் வாழ்வின் ஒவ்வொரு அம்சமும்,

நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும்,

நாம் செய்யும் ஒவ்வொரு செயலும்,

நாம் உள்ளே இழுக்கும் ஒவ்வொரு மூச்சும்,

நம் இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும்,

நம்முடைய வளர்ச்சியின் ஒரு செயல்முறையாக இருக்க வேண்டும் என்பதுதான்.

அப்படி இருந்தால் அதுதான் யோகா.

எனவே யோகத்தின் செயல்முறையில் இல்லாதவர்கள் என்று இந்த உலகில் யாருமே இல்லை.

கேள்வி..

யோகா என்பது எல்லோருக்குமானதா..?

இல்லை இது இந்து மதத்திற்கு மட்டும் உரித்ததா..?

நிச்சயமாக இது எல்லோருக்கும் பொதுவானதுதான் ஆனதுதான்.

ஏனென்றால்,

ஒவ்வொரு மனிதருக்கும் அவருக்குள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது.

ஒவ்வொருவரும் தாங்களாகவே சில யோகங்களை,

அவர்கள் தங்களுக்கு தெரியாமலேயே செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

தங்களது புத்திசாலித்தனத்தின் மூலமாகவோ,

உணர்ச்சியின் மூலமாகவோ,

தங்கள் உடலின் மூலமாகவோ,

தங்களின் சக்தியின் மூலமாகவோ,

ஏதோ ஒருவிதமான யோகாவை அவர்கள் நாள்தோறும் செய்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

அதை சற்று முறைப்படுத்தி செய்தால் பலனுடையதாக இருக்கும்.

மற்றும்,

மக்களுக்கு யோகா என்பது ஒரு புதிய விஷயம் அல்ல.

கேள்வி...

பிராணாயம் என்றால்..?

மூச்சை கட்டுப்படுத்தி அதன் மூலம் மனம்,உயிர் ஆற்றலை கட்டுப்படுத்தும் பயிற்ச்சிக்குத்தான் பிராணாயாமம் ஆகும்.

கேள்வி...

தியானம்.....?

ஏதாவது ஒரு பொருளின் மீது மனதை குவித்து
உள் ஆற்றலை பிரபஞ்ச ஆற்றலோடு கலக்கும் பயிற்ச்சியால் மனதை விரிக்கும் முயற்சியே தியானம் ஆகும்.

Monday, August 4, 2014

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

ஒரு நாள் கையில் ஒரு பாட்டிலும் ஒரு ஸ்பூனுமாக நாராயணசாமியின் ஆய்கவத்தினுள் நுழைந்தான் ஒரு ஆசாமி.

"வாங்க சார், என்ன வேணும் உங்களுக்கு?" கேட்டார் நாராயணசாமி.

"நான் ஒன்றைத் தருகிறேன், அதை ருசித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா...?" என்றான் அந்த ஆசாமி.

"நிச்சயமாக... தாருங்கள்"

உடனடியாக அந்த ஆசாமி, தன் கையில் வைத்திருக்கும் பாட்டில் இருந்து ஒரு ஸ்பூன் திரவத்தை ஊற்றி நாராயணசாமியிடம் கொடுத்தான்.

அதை வாயில் ஊற்றி, ருசித்துப் பார்த்த நாராயணசாமி சற்றே முகச் சுளிப்புடன்....

"கொஞ்சம் உப்பாக இருக்கிறது ..." என்றார்.

"நல்லவேளை உப்பாகத்தானே இருக்கிறது. இனிப்பாக இல்லையே...."

"இல்லை சார். ஏன்.. என்னாயிற்று?" புரியாமல் நாராயணசாமி கேட்க,

அந்த ஆசாமி சொன்னான்,

"வேற ஒண்ணும் இல்லை சார் ... என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, எனது சிறுநீரை டெஸ்ட் பண்ணச் சொன்னார். நல்லவேளை நீங்கள் சர்க்கரை இல்லை ... உப்பாக இருக்கிறது எனத் தெரிவித்து விட்டீர்கள். நன்றி"

சிகரட் கம்பனி விளம்பரம்....


ஒரு தேசத்தில் சிகரட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும்
கிடையாது..
.
அங்கு உள்ள சிகரட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்....
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த
கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்...
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது...
சிகரட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன்
ஆஜரானார்...
.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம்
செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய்
இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
“ முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்..
காரணம் எப்பொழுது சிகரட் குடிக்க
ஆரமித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது...
முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன்
வரமாட்டான்...
.
2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது... எப்படி வரும்...?
சிகரட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்...?
.
3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது...
எப்படி பிறக்கும்...? சிகரட்டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை
இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும்
பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண்
என்ன பிள்ளையே பிறக்காது.... “
என்று சொல்லி முடித்தான்...
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான்
யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம்
என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிமதி...
.
# இப்படி தந்திரமான பேச்சைதான் அரசியல்வாதிகளும்,
விளம்பரம் செய்வோர்களும் கையாள்கிறார்கள்....
நாம்தான் விழிப்புடன் இருத்தல் வேண்டும்....

****புதுக்குறள் *******

****புதுக்குறள் *******

1.அம்மா சுட்ட தோசை ருசித்திடும்-
ருசிக்காதே மனைவி சுட்ட தோசை...

2.முதுகில் குத்துவோரை ஒறுத்தல் அவர் மூக்குவீங்க
மூஞ்சியில் குத்தி விடல்...

3.கள்ளஓட்டு லஞ்சம் வெட்டுக்குத்து இந்நான்கும்
செய்வது அரசியல்வாதிக்கியல்பு...

4.யாகாவாராயினும் Password காக்க காவாக்கால்
சோகாப்பர் hack செய்யப்பட்டு.

5.விரும்பிய மனம் விரும்பா விடின்
துரும்பா இளைப்பார் தூய காதலர்..

6.ரன் எடுத்து ஆடுவாரே ஆடுவார்...
மற்றெல்லாம் டக்கெடுத்து பின் செல்பவர்

7.CHAT எனில் FB-CHATசெய்க இல்லையேல்
CHATடலின் CHATடாமை நன்று

8.மாவினால் சுட்ட வடை உள்ளாறும் ஆறாதே
வாயினால் சுட்ட வடை

9.மொக்கை போடுதல் எல்லார்க்கும் எளிது
அரியவாம் கடலைபோ டுதல்

10.பீடியால் சுட்ட புண் உள்ளாறும்
ஆறாதே லேடியால் கெட்ட மனம்

11.கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை தன் திருமணத்தன்று
தாகசாந்தி செய்ய மறுக்கும் நண்பனுக்கு

12.போடுக கடலை போடுக போட்டபின் பில்லுகட்டுக அதற்குத் தக...

Thursday, July 31, 2014

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார்.

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர்.
ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப் பார்த்துக் கிண்டலாகச் சொன்னார்” ஐயா! அறிஞரே! நீங்கள் பெரிய அறிஞர் என்று உலகமே பாராட்டுகிறது. ஆனால் உங்கள் பையன் ஒரு அடி முட்டாளாக இருக்கிறானே! தங்கம், வெள்ளி இவற்றுள் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது என்று அவனைக் கேட்டால் அவன் வெள்ளி என்று சொல்கிறான். வெட்கக்கேடு!”
அறிஞர் மிக வருத்தமடைந்தார். பையனை அழைத்தார். கேட்டார் ”தங்கம், வெள்ளி இவை இரண்டில் அதிகம் மதிப்பு வாய்ந்தது எது?”
பையன் சொன்னான்”தங்கம்”
அவர் கேட்டார் ”பின் ஏன் ஊர்த்தலைவர் கேட்கும்போது வெள்ளி என்று சொன்னாய்?”
பையன் சொன்னான்” தினமும் நான் பள்ளி செல்லும்போது அவர் ஒரு கையில் தங்க நாணயமும், மறு கையில் வெள்ளி நாணயமும் வைத்துக் கொண்டு என்னை அறிஞரின் மகனே என அழைத்துச் சொல்வார் ”இவ்விரண்டில் மதிப்பு வாய்ந்ததை நீ எடுத்துக் கொள் ”.
”நான் உடனே வெள்ளியை எடுத்துக் கொள்வேன் .உடனே அவரும் சுற்றி இருப்பவர்களும் சிரித்துக் கிண்டல் செய்வார்கள்.நான் அந்த நாணயத்துடன் போய் விடுவேன்.
இது ஓராண்டாக நடக்கிறது. தினம் எனக்கு ஒரு வெள்ளி நாணயம் கிடைக்கிறது. நான் தங்கம் என்று சொல்லி எடுத்துக் கொண்டால் அன்றோடு இந்த விளையாட்டு நின்று விடும். எனக்கு நாணயம் கிடைப்பதும் நின்று போகும். எனவே தான்…” அறிஞர் திகைத்தார்!
நீதி: வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் முட்டாள்களாக வேடம் அணிகிறோம், மற்றவர்கள் அதைப் பார்த்து மகிழ்வதற்கு. ஆனால் நாம் தோற்பதில்லை. அவர்கள் வெல்வதாக எண்ணிக் கொண்டிருப்பார்கள். ஆனால் வேறு கோணத்தில் பார்க்கும்போது நாம் வென்றிருப்போம்! எந்தக் கோணம் நமக்கு முக்கியம் என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும்!

Friday, July 4, 2014

சிறிய தூண்டில்.....................


நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்கு வேலை தேடிச் சென்றார் ஒருவர்.
அங்கே ஒரு விற்பனை நிலையத்தில்....
"சேல்ஸ் துறையில் உனக்கு முன் அனுபவம் இருக்கிறதா?" மேனேஜர் கேட்க,
"நான் எனது நாட்டில் சேல்ஸ்மேனாகத்தான் வேலை பார்த்தேன்" என்றார் நம்மாளு.
"அப்படியானால் உனக்கு நான் வேலை தருகிறேன். நாளை முதல் நீ வேலையைத் தொடங்கலாம். கடை மூடும்பொழுது நீ எப்படி வேலை பார்த்தாய் எனப் பார்ப்பதற்கு நான் வருவேன்"
முதல் நாள் கடை மூடும் நேரம் மேனேஜர் வருகிறார்.
"இன்று எத்தனை நபர்களிடம் சேல்ஸ் செய்தாய்?"
"ஒருவரிடம் மட்டும்…"
"என்ன ஒருத்தர் மட்டுமா? ... உன்னுடன் வேலை பார்க்கும் மற்றவர்களெல்லாம் நாள் ஒன்றுக்கு 20லிருந்து 30 வரை செய்யக் கூடியவர்கள். உன் வேலை நிரந்தரமாக வேண்டுமானால் நீயும் இவர்களைப் போல் முயற்சி செய்ய வேண்டும். சரி எவ்வளவு டாலருக்கு விற்றாய்?"
"$1012347.64"
"ஒரே ஒரு நபரிடம் இவ்வளவு டாலருக்கா? என்னென்ன விற்றாய்?"
"முதலில் அவரிடம் சிறிய தூண்டில்,
கொஞ்சம் பெரிய தூண்டில்,
அதைவிடப் பெரிய தூண்டில்,
ஃபிஷிங் ராட்,
ஃபிஷிங் கியர் எல்லாம் விற்றேன்.
பிறகு அவரிடம் “எங்கே மீன் பிடிக்கிறீர்கள்?” என்று கேட்டேன். அவர் கரையில் அமர்ந்து மீன் பிடிப்பதாகச் சொன்னார். உடனே நமது போட்டிங் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு போட்டை விற்றுக் கொடுத்தேன். அவர் என்னுடைய கார் இந்த போட்டை இழுக்குமா எனத் ன்று தெரியவில்லையே என்றார். நான் நமது ஆட்டோமோடிவ் டிபார்ட்மெண்ட் சென்று ஒரு 4x4 ட்ரக் விற்றுக் கொடுத்தேன். பின்னர் அவரிடம் நீங்கள் எங்கு தங்கியிருக்கிறார் எனக் கேட்டேன். இப்போதைக்கு இடம் எதுவும் இல்லை என்று சொன்னார். உடனே நான் அவருக்கு 4 பேர் தங்கக் கூடிய அளவுள்ள “டெண்ட்” –ம் விற்றுக் கொடுத்தேன்"
"என்ன ஒரு தூண்டில் வாங்க வந்தவரிடமா இவ்வளவும் விற்றாய்?"
மேனேஜர் அதிசயமாய்க் கேட்க, நம்மாளு சொன்னார்,
"அய்யோ! இல்லை சார்! அவர் தலைவலிக்காக அனாசின் மாத்திரை வாங்க வந்தார். நான்தான் மீன் பிடித்தால் மனசுக்கு ரொம்ப ரிலாக்ஸ் - ஆக இருக்கும். எப்போதும் உங்களுக்குத் தலைவலியே வராது என்று கூறினேன்"

Tuesday, July 1, 2014

புஷ் திருடிட்டான்

அமெரிக்க சிறுவன் ஒருவனுக்கு பயங்கர பணகஷ்டம். அவனுக்கு ஒரு அம்பது டாலர் தேவைப்பட்டது. கடவுளிடம் வெகு நாளாக வேண்டி பார்த்தான். ஒண்ணும் வேலைக்குஆகவில்லை.

கடைசியாக பணம் தர வேண்டி கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். உறையின் மேல் கடவுள், அமெரிக்கா என்று எழுதி தபாலில் சேர்த்து விட்டான். பட்டுவாடா பண்ண வேண்டிய தபால் அதிகாரிகள் இந்த கடிதத்தை பார்த்து ஆச்சரியபட்டார்க ள்.

ஒரு ...விளையாட்...ட ாக அதை வெள்ளை மாளிகை...க்கு அனுப்பி வைத்தார்கள். புஷுக்கு ஒரே ஆச்சர்யம். "சரி.. இந்த பையனுக்கு உதவுவோம்.

ஆனால் ஒரு சிறு பையனுக்கு அம்பது டாலர் எல்லாம் அதிகம். எனவே இருபது டாலர் மட்டும் அனுப்புவோம்" என்று அனுப்பி வைத்தார். பணம் கிடைத்தவுடன்பையனுக்கு குஷி தாளவில்லை. நன்றி தெரிவித்து கடவுளுக்கு ஒரு கடிதம் எழுதினான். "ரொம்ப நன்றி கடவுளே.. நான்கேட்ட மாதிரி பணம் அனுப்பி வச்சுட்டீங்க..

ஆனாலும்.. நீங்க அமெரிக்க ஜனாதிபதி புஷ் ஆபீஸ் மூலமா பணம் அனுப்புனத நான் கவர பார்த்து தெரிஞ்சுக்கிட்ட ேன்.. தயவு செஞ்சு இனிமேல் அப்படி அனுப்பாதீங்க.. நீங்க அனுப்புன காசுல பாதிய அந்த புஷ் திருடிட்டான்


:D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D  :D :D  :D  :D  :D

:: தகவல் துணுக்குகள் ::


* எடிசனின் உயிர் பிரியும்போது கடைசியாக 'விளக்கை எரியவிடுங்கள் என் ஆவி பிரியும்போது வெளிச்சமாக இருக்கட்டும்!' என்றாராம்!!.

* ஆண்களாக பிறந்து பெண்ணாக உணருபவர்கள் 'திருநங்கை' பெண்ணாக பிறந்து ஆணாக உணருபவர்கள் 'திருநம்பி'!.

* தலைவா படத்துக்காக தற்கொல பண்ணிக்கிறது ரஜினி படத்துக்காக மண்சோறு திங்கிறது போன்றவை Celebrity Worship Syndrome என்ற மனநோய் வகையறாக்கள்!!.

* பறவை இனங்களில் ஆந்தை மட்டுமே கண் சிமிட்டும் போது மேல் இமையை மூடுகிறது மற்ற அனைத்து பறவைகளும் கண்களை சிமிட்டுவது கீழ் இமையால்தான்!.

* கூகுள் என்ற சொல் ஒரு கோடி பூஜ்ஜியங்களைக் கொண்ட எண்களுக்கான பொதுவான பெயர் ஆகும்!.


* உங்களுடைய கை நகங்கள் 24 மணி நேரத்தில் 0.00007 அங்குலம் வளர்கின்றன!.

*மொகலாயப் பேரரசர் பாபர் உயிரிழக்கும் போது தன் மகன் ஹுமாயூனிடம் "இந்தியாவில் உள்ள இந்துக்களைத் துன்புறுத்தாதே!" என்றாராம்!.

* ஹிட்லர் ஒரு சைவ விரும்பி! மேலும் மிருகவதையை தீவிரமாக எதிர்ப்பவர்!!.

* இங்கிலாந்தைச் சேர்ந்த மாத்யூ கிரீன் என்பவர் இதயமேயில்லாமல் இயந்திரங்களின் உதவியால் 2 வருடங்கள் வரை வாழ்ந்திருக்கிறார்!.

* 15.23 நிமிடத்தில் லேப்டாப்பை கழற்றி மாட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் 8 வயது கோவை சிறுமி இடம் பிடித்துள்ளார்!.

* கைரேகை, ஜோசியம் பார்ப்பவர்கள் ஆண்களுக்கு வலது கையும் பெண்களுக்கு இடதுகையும் பார்த்து பலன் கூறுவது வழக்கம்!.

*ஐன்ஸ்டீனின் கணிப்புப்படி உலகில் தேனீ இனம் முற்றிலும் அழிந்து போனால் அன்றிலிருந்து 4 வருடத்திற்குள் மனித இனம்அழிந்து போகுமாம்!!.

* தோல்விகளைக் கண்டு துவளாதீர்! மில்லியன் கணக்கான விந்தணுக்களின் வெற்றி பெற்றது நீங்கள் ஒருவரே! பயாலஜிப்படி சாதிக்கப் பிறந்தவர் நீங்கள்!.

Monday, June 30, 2014

ஒரு ஊரில் , ஒரு ராஜா !

ஒரு நகரத்திற்கு ஒரு சட்டமிருந்தது. அதன்படி யார் வேண்டுமென்றாலும் அந்த நகரத்திற்கு ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்தப் பதவி ஐந்தாண்டுகள் மட்டுமே! ஐந்தாண்டு முடிந்த அடுத்த நாளே மன்னனை ஆற்றின் கரைக்கு மறுபுறம் உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.



அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டுமே! மன்னன் காட்டிற்குள் நுழைந்தால் போதும்; வனவிலங்குகள் கொன்று தீர்த்துவிடும். இந்த சட்டத்தை யாராலும் மாற்ற இயலாது. இந்த நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவன் மட்டுமே அரியணையில் அமரப் பொருத்தமானவன். ஆக, மன்னனாக முடிசூட்டிக் கொண்டவனின் தலையெழுத்து, ஐந்தாண்டுகளுக்குப் பின் கட்டாய மரணம்.

இந்தக் கடுமையான சட்டத்துக்கு பயந்தே யாரும் அந்தப் பதவிக்கு ஆசைபடாமலிருந்ததால் அந்த அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது. இருப்பினும் ஒரு சிலர்'எப்படியிருந்தாலும் சாகத்தானே போகிறோம்; மன்னனாகவே மடியலாமே!' என்று பதவி ஏற்பதுண்டு. அதிலும் பாதி மன்னர்கள் இடையிலேயே மாரடைப்பால் மரணமடைவதுமுண்டு.


இப்படி ஒரு மன்னனுக்கு ஐந்து ஆண்டு ஆட்சிக்காலம் முடிந்தது. அன்று ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அவனை வழியனுப்ப நாடே திரண்டிருந்தது.

மன்னன் வந்தான், அவனுடைய சிறப்பான ஆடைகளையும் நகைகளையும் அணிந்து, முடிசூடி, தங்க வாளேந்தி வைரங்கள் மின்ன மக்கள் முன் நின்றான். மக்கள் வாயைப் பிளந்தனர் ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறான்; அதற்கு இவ்வளவு அலங்காரமா!''

தான் செல்லவிருந்த படகைப் பார்த்துவிட்டு சினத்துடன் கூறினான், ''மன்னன் செல்லும் படகா இது! பெரிய படகைக் கொண்டு வாருங்கள்! நான் நின்றுகொண்டா செல்வது! சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!''

கட்டளைகள் பறந்தன; காரியங்கள் நடந்தன! சற்று நேரத்தில் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது.

மக்கள் திகைத்து நிற்க, மன்னன் கையசைக்க பயணம் தொடர்ந்தது.

மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே! காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த மன்னனும் மகிழ்ச்சியாக சென்றதில்லை. அழுது புலம்பி,புரண்டு, வெம்பிச் செல்வார்கள். இவனோ, மகிழ்ச்சிக் களிப்பில் பொங்கி வழிகிறான்.

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் கேட்டான் ''மன்னா! எங்கே செல்கிறீர்கள் தெரியுமா?''

''தெரியும் மறுகரைக்குச் செல்கிறேன்!''

''அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை தெரியுமா?''

''தெரியும். நானும் திரும்ப இந்த நகரத்திற்கு வரப் போவதில்லை!''

''பின்னே எப்படி உங்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது?''

''அதுவா! நான் என்ன செய்தேன் தெரியுமா? ஆட்சிக்கு வந்த ஓராண்டு முடிவில் ஆயிரம் வேட்டைக்காரர்களைக் காட்டிற்கு அனுப்பினேன்; அவர்கள் கொடிய விலங்குகளை வேட்டையாடிக் கொன்று விட்டார்கள்!

இரண்டாமாண்டு முடிவில் ஆயிரம் விவசாயிகள் சென்றார்கள்; காட்டைத் திருத்தி உழுதார்கள்; இன்று ஏராளமான தானியங்கள் காய்கறிகள்.

மூன்றாமாண்டு முடிவில் ஆயிரம் கட்டடக்கலை வல்லுநர்கள், தொழிலாளர்கள் சென்றனர். இன்று வீடு, வாசல், அரண்மனை, அந்தப்புரம், சாலைகள் எல்லாம் தயார்!

நான்காம் ஆண்டு முடிவில் ஆயிரம் அரசு அதிகாரிகள் சென்றனர். நிர்வாகம் சீரடைந்தது. இந்த 4000 பேரும் தங்கள் மனைவி, குழந்தைகளுடன் சென்று அங்கே வாழ்கின்றனர்.

இப்போது நான் காட்டிற்குப் போகவில்லை; என்னுடைய நாட்டிற்குப் போகின்றேன்! சாகப் போகவில்லையப்பா, வாழப் போகின்றேன்! அதுவும் மன்னனாக ஆளப்போகிறேன்! உனக்கு ஒருவேளை அரண்மனைப் படகோட்டி வேலை வேண்டுமென்றால், இந்தப் படகோடு இப்படியே வேலைக்கு சேர்ந்து விடு!'' என்றான் மன்னன்.

ஒரே ஒரு கேள்வியை மட்டும் எடுத்துக் கொள்ளலாம்.

மன்னனின் வெற்றிக்குக் காரணங்கள் யாவை?

பல காரணங்கள் இருந்தாலும் குறிப்பாக இரண்டினைக் கூறலாம்.

ஒன்று : ஐந்து ஆண்டுகளுக்குப் பின் உயிர் வாழவேண்டும்; அதுவும் மன்னனாகவே வாழவேண்டும் என்று முடிவு எடுத்தது.

இரண்டு : அந்த முடிவினை அடைவதற்காக திட்டமிட்டு உழைத்தது!

அந்த மன்னனுடைய வெற்றிக்கு மட்டுமல்ல; நாம் அனைவருமே வெற்றி பெறவேண்டுமென்றால் நமக்குத்தேவை ஒரு இலக்கை நிர்ணயித்தலும் அதற்காக திட்டமிடுதலும்,திட்டமிட்ட பின் வெற்றி பெறும்வரை கடுமையாகவும் புத்திசாலித்தனமாக உழைப்பதுமே

இப்போது நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதுதான் உங்கள் எதிர்காலம்!

இப்போது ஒருவன் கடுமையாக உழைக்கிறானே அதுதான் அவனுடைய வருமானமாகப் பின்னால் வரும்!

இப்போது ஆழ்ந்து படிக்கும் மாணவனுக்கு அதுதான் தேர்ச்சி என்று ஒரு எதிர்காலத்தைக் கொண்டுவரும்.

அப்படிப் பார்த்தால் எல்லாமே இப்போது நாம் செய்வது செய்து கொண்டிருப்பதுதான் நம் நாளைய வாழ்வைத் தீர்மானிக்கிறது. அவை ஒவ்வொன்றையும் திட்டமிட்டு சிறப்பாகச் செய்தால் நம் வாழ்க்கை எவ்வளவு மேன்மையாக அமையும்!

எந்த ஒரு செயல் செய்வதற்கு முன் திட்டமிடுங்கள், அந்த திட்டத்தை செயல் படுத்துவதற்கு முன் பலமுறை யோசியுங்கள். நன்றாக இருக்கும் என்று நாம் உணர்ந்த பின் அதை செயல்முறை படுத்துங்கள் பின் வெற்றி நமக்கே !

இன்றைய பொழுது இனிய பொழுதாக அமையட்டும்! வாழ்த்துகள் !!
------------ --------- --------- --------- --------- --------- -------

நாளை விடியுமென்று விண்ணை நம்பும்போது
நம்மால் முடியுமென்று உன்னை நம்பு!!

பக்கத்து நாட்டுத் தூதுவன் [புதிர்]


ஒரு நாட்டின் அரசவை கூடியிருந்தது. அரியனையில் அரசன் கம்பீரமாக வீற்றிருந்தான்.
அப்போது பக்கத்து நாட்டுத் தூதுவன் ஒருவன், அங்கு வந்தான்.அரசனைப் பணிவாக வணங்கினான்.
"தூதனே! உங்கள் நாட்டு அரசரிடம் இருந்து எனக்கு என்ன செய்தி கொண்டு வந்திருக்கின்றாய்?" என்று கேட்டான் அரசன்.
அவனோ ஏதும் பதில் கூறாமல் அமைதியாக நின்றான்.
"தூதனே!!....எதுவாக இருந்தாலும் தயங்காமல் சொல்" என்றான் அரசன்.
தூதுவன் தனது பையில் இருந்து ஒரு கோலக் கட்டியை எடுத்தான். அந்தக் கோலக்கட்டியினால், அரசனது அரியனையைச் சுற்றிலும் வட்டமாகக் கோடு போட்டான்.பிறகு ஏதும் பேசாமல் அமர்ந்துவிட்டான்.
அவன் ஏன் அப்படிச் செய்தான் என்று அரசனும் மற்றவர்களும் அவனைக் கேட்டார்கள். தூதுவனோ பதிலே பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
தூதனின் செய்கையினால் அரசன் குழப்பம் அடைந்து, தனது அமைச்சர்களைப் பார்த்து, யாருக்காவது பொருள் புரிகிறதா? என்று கேட்டான்.எந்த அமைச்சரும் அதற்குப் பதில் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்கள். ஏனென்றால் தூதுவனின் செய்கையினால் அவர்களும் குழப்பம் அடைந்திருந்தார்கள்.
அப்போது வயதில் மூத்த அமைச்சர் ஒருவர் எழுந்தார். " அரசே!!!...இந்தத் தூதுவனின் செய்கையில் ஏதோ ஒரு உட்பொருள் இருக்கிறது. நமது நகரத்தில் மாணிக்கம் என்று ஒரு அறிஞர் இருக்கிறார். அவர் புத்தி கூர்மை மிக்கவர். அவரால்தான் இதற்குப் பொருள் கூற இயலும். அதனால் அவரை அழைத்துவர உத்திரவிடுங்கள்" என்று கேட்டுக்கொண்டார்.
அரசனும் வீரர்களுக்கு உத்திரவு கொடுத்தான். வீரர்கள் மாணிக்கத்திடம் சென்றார்கள். அரசன் அழைப்பதாகக் கூறினார்கள்.மாணிக்கம் என்ன நடந்தது என்பதை வீரர்களிடம் விசாரித்துத் தெரிந்துகொண்டார். சிறிது ஆலோசனை செய்தார். பிறகு ஒரு முடிவுக்கு வந்தவராக, இரண்டு கோலி குண்டுகளைத் தேடியெடுத்து பையில் போட்டுக்கொண்டார்.உயிருள்ள ஒரு கோழியை கையில் பிடித்துக்கொண்டார்.
வாருங்கள் போகலாம் என்று வீரர்களுடன் அரசவைக்கு வந்து சேர்ந்தார்.
அரசவைக்கு வந்ததும் அரசனை வணங்கினார்.பிறகு அங்கே அமர்ந்திருந்த தூதுவனைப் பார்த்து நகைத்தார்
.தனது பையில் போட்டிருந்த கோலிக் குண்டுகளை எடுத்து, அவன் முன்னே உருட்டிவிட்டார்.
அதைக் கண்ட தூதுவன், தான் கொண்டு வந்திருந்த பையில் இருந்து நெல்லை எடுத்தான்.
அதை சபையில் எறிந்தான்.நிறைய நெல் அங்கே தரையெல்லாம் சிதறியது.
உடனே மாணிக்கம் தனது கையில் பிடித்திருந்த கோழியை இறக்கிவிட்டார்.
சிதறிக்கிடந்த நெல் முழுவதையும் கொத்தித் தின்றுவிட்டது.
அதைக் கண்டு திகைத்து நின்ற தூதுவன், அரசனை வணங்கிவிட்டுத் தன் நாட்டுக்குப் புறப்பட்டுப் போனான்.
அரசவையில் இருந்தவர்களுக்கு என்ன நடக்கிறது என்று ஒன்றுமே புரியவில்லை
.தூதனும் மாணிக்கமும் நடந்துகொண்ட விதம் ஒரே புதிராக இருந்தது.
என்ன நடந்தது என்று தெளிவுபெற விரும்புகிறான் அரசன்.
மாணிக்கம் விளக்கம் சொல்வதற்கு முன்பாக மன்ற நண்பர்களே நீங்கள் கூறுங்களேன்!!!







நான்கு பஞ்சு வியாபாரிகள் [புதிர்]..

நான்கு பஞ்சு வியாபாரிகள் இருந்தனர்.
பஞ்சை எலிகள் நாசமாக்கிவிடுவதால் அவற்றைப் பிடித்துத் தின்ன ஒரு பூனை வளர்த்தனர்.
பூனையின் நான்கு கால்களையும் ஒவ்வொருவரும் பிரித்துக்கொண்டு பராமரித்தனர். அவரவர் கால்களுக்குத் தங்க மோதிரம், சங்கிலி எனப் போட்டு அழகு பார்த்தனர்.

ஒருநாள் பின்னங்கால் ஒன்றில் பூனைக்கு அடிபட, அந்தக் காலுக்கு உரிய வியாபாரி மண்ணெண்ணெயில் பஞ்சை நனைத்துக் கட்டுப்போட்டார்.

அந்த நேரம் பார்த்து பூனை அடுப்போரம் ஒதுங்க, காயம்பட்ட காலில் தீ பிடித்துக்கொள்கிறது. தன் காலில் தீயைப் பார்த்ததும் மிரண்ட பூனை, பயந்து பஞ்சு கோடவுனுக்குள் ஓட, பல லட்ச ரூபாய் பஞ்சு எரிந்து நாசமானது.
அதற்கு நஷ்டஈடு கேட்டு மற்ற மூன்று வியாபாரிகளும் அந்த எரிந்த காலுக்குரிய வியாபாரி மீது வழக்குத் தொடுத்தனர்.

ஆனால், இந்த மூன்று வியாபாரிகளும்தான் அந்த வியாபாரிக்கு நஷ்டஈடு கொடுக்க வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.

ஏன் நீதிபதி அப்படித் தீர்ப்பளித்தார்?
.
.
.
.
.
.


Monday, June 23, 2014

பில் கேட்சுக்கு ஒரு கடிதம்….



புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய x, சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.

7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

முட்டாள் வேலைக்காரங்க..

ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு. மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி நம்மை உற்சாகப்படுத்துகின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும், நகைச்சுவைகளை படித்து, பார்த்து சிரித்து மகிழ்வோம்....

பாரில் நம்ம நாராயணசாமி....

சனிக்கிழமை ...

டாஸ்மாக் பாரில் ஒரு டேபிளில் உக்காந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார் நம்ம நாராயணசாமி.

டேபிள் மேல் இருந்த செல்போன் ஒலித்தது.. எடுத்து ஸ்பீக்கர் மோடில் போட்டு,

"ஹலோ" என்றார்.

"என்னாங்க நான் ஷாப்பிங் வந்தேன்.. ஒரு லட்ச ரூபாயில் நகை பார்த்தேன்.. எடுத்துக்கவா..." என்றது மறுமுனை.

"எடுத்துக்கோ உனக்கு இல்லாத காசா..."

"இருபதாயிரம் ரூபாயில் பட்டு புடவை ஒண்ணு எடுத்துகிறேங்க..."

"ஒண்ணு போதுமா டார்லிங்... இரண்டா எடுத்துக்கோ.."

"சரிங்க..உங்க கிரெடிட் கார்டு எடுத்துட்டு வந்தேன்..எல்லாத்தையும் அதுலே வாங்கிக்கவா..."

"ஒக்கே டார்லிங்..தாராளமா வாங்கிக்க.." என்று சொல்லிவிட்டு போனை வைத்தார் மேஜையில் வைத்தார் நாராயணசாமி.

சுற்றி அமர்ந்து இருந்த நண்பர்கள் ஆச்சரியத்துடன்,

"என்னடா இது உன் பொண்டாடிக்கு இவ்ளோ செலவு பண்ண சரின்னு சொல்லிட்ட... நீ அவ மேல அவ்ளோ அன்பா வச்சி இருக்க... கிரேட் மச்சி...' என்றார்கள்.

ஆனால் நாராயணசாமியோ பக்கத்து மேஜையில் அமர்ந்து இருந்தவர்களிடம் விசாரித்து கொண்டிருந்தார்,

"எக்ஸ்கிஸ் மி சார் ... இந்த மொபைல் போன் யாரோடது...?"

ஒரு அரசியல்வாதி.....

ஒரு பலசரக்கு வியாபாரி, ஒரு ஆசிரியர், ஒரு அரசியல்வாதி மூவரும் ஒரு காட்டுக்குள் சென்ற போது வழிதவறிப் போயிற்று.

மிகுந்த அலைச்சலுக்குப் பின்னர் ஒரு விவசாயியின் வீட்டைக் கண்டு பிடித்தனர். விவசாயியிடம் ஒரு இரவு தங்குவதற்கு அனுமதி கேட்க, ''உங்களில் இருவர் தங்க அறை கொடுக்க முடியும். மூன்றாவது நபர் ஆடு, பசு, பன்றி இவை தூங்கும் கொட்டகையில் தான் தூங்க வேண்டும்,'' என்று விவசாயி சொன்னார்.

ஆசிரியர் ,''நான் போய் அங்கு படுத்துக் கொள்கிறேன்.''என்றார். மற்ற இருவரும் அறையில் போய் படுத்துக் கொண்டனர்.

கொஞ்ச நேரம் ஆனவுடன் கதவு தட்டப்பட்டது. கதவைத் திறந்த போது அங்கு ஆசிரியர் நின்று கொண்டிருந்தார். ''என்னால் அந்த நாற்றத்தைத் தாங்க முடியவில்லை.'' உடனே பலசரக்கு வியாபாரி,''சரி,சரி,நான் அங்கு போய் தூங்குகிறேன்,''என்று கூறி கொட்டகைக்குச் சென்றார்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் கதவு தட்டப்பட்டது. திறந்து பார்த்தால் வியாபாரி வாந்தி எடுத்துக் கொண்டே நிற்கிறார்.இறுதியாக அரசியல்வாதி, தான் அங்கு போவதாகக் கூறிச் சென்றார்.

ஐந்து நிமிடத்தில் கதவு தட்டப்பட்டது. ஆசிரியரும், வியாபாரியும் கதவைத் திறந்து பார்த்தனர்.

இப்போது ஆடு, பசு, பன்றி இவையெல்லாம் நின்று கொண்டிருந்தன.

Saturday, June 21, 2014

மாமனாரின் அன்புப் பரிசு

ஒரு பணக்கார மாமியாருக்கு 3 மருமகன்கள்..
அவளுக்கு தன் மருமகனெல்லாம் தன் மேல எவ்வளவு அன்பா இருக்காங்கன்னு தெரிஞ்சிக்க ஆசையா இருந்தது..

ஒரு நாள் மூத்த மருமகனை அழைச்சுக்கிட்டு படகுப் பிரயாணம் போனாள்.. நடுவழியிலே தண்ணிக்குள்ளே தற்செயலா விழுந்தது போல விழ, மருமகன் பாய்ஞ்சு காப்பாத்திட்டாரு.

மறுநாள் அவர் வீட்டு வாசல்லே ஒரு புத்தம் புது மாருதி கார் நின்னுட்டுருந்தது..
அதன் கண்ணாடியில் ஒரு அட்டை ஒட்டப்பட்டிருந்தது..

" மாமியாரின் அன்புப் பரிசு..

"ரெண்டாவது மருமகனுக்கும்
இந்த சோதனை நடந்தது.. அவரும் ஒரு மாருதி கார் வென்றார்.."

மாமியாரின் அன்புப் பரிசாக..

".மூன்றாவது மருமகனுக்கும் இந்த சோதனை நடந்தது.. அவர் கடைசி வரை காப்பாத்தவே இல்ல..

மாமியார் கடைசியா பரிதாபமா 'லுக்கு' உட்டப்ப சொன்னான்.. "போய்த் தொலை.. எனக்கு கார் வேணாம்.. சாவுற வரைக்கும் சைக்கிள்ல போயிக்கிறேன்..பொண்ணா வளர்த்து வச்சிருக்க..?" மாமியார் செத்துட்டுது..

மறுநாள் அவன் வீட்டு வாசல்லே ஒரு பளபளக்கும் HYUNDAI கார் நின்னுச்சு.." மாமனாரின் அன்புப் பரிசு" என்ற அட்டையோட….! 

Friday, June 20, 2014

அதிசய விளக்கு.......

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர். 

மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,

"உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்" என்கிறது.

மூவருக்கும் ஆச்சரியம்!

உடனே கேஷியர் முந்திக்கொண்டு,

"நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்" என்கிறார்.

பூதமும் "அவ்வாறே நடக்கட்டும்" என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.

அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…

"அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்" என்றார்.

அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.

கடைசியாக மேனேஜர்,

"நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?" என்றது பூதம்.

அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,

"ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. நான் சாப்பிட்டு முடிப்பதற்குள் அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!"

அரண்மனையில் ஒரு போட்டி!



விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலா ம்.

உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.

திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?

ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.

அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,

"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"

"இல்லை..."

"பின்னே... 10 கிராமங்களா?"

"ப்ச்! வேண்டாம்..."

"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"

"தேவை இல்லை..."

"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."

"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்...!"

நம்ம நாராயணசாமி......

நாராயணசாமியும், ஒரு பெண்ணும் குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டனர்.

ஒரு நாள் இரவில்.....

“ஏங்க நம்மள‌ நம்ம வீட்டில உள்ளவங்க ஏத்துக்குவாங்களா..?”

“இந்த நேரத்தில் போய்... இந்த கதை தேவையா..? நேரத்தை ஏன்தான் இப்படி வீணடிக்கிறயோ..... !”

“என்னங்க இப்படி பெசறீங்க..!?”

“அதுக்கில்லை, நாம என்ன ஊர்ல உலகுத்துல செய்யாததையா செஞ்சிட்டோம். எல்லார் போலவும் காதலிச்சோம். வீட்டில் நம்ம காதலை ஏத்துக்கலை அதான் ,ஓடி வந்திட்டோம் நம்ம காதலை வீட்டில் ஏத்துக்கிட்டிருந்தா நாம ஏன் வீட்டைவிட்டு ஓடி வந்திருக்கப்போறோம் ”

“என்னதான் உங்களை நம்பி வந்திட்டாலும், என் ஞாபகம் எல்லாமே என் வீட்டில் உள்ளவங்க மேலதான் இருக்கு.....!”

“நீ சொல்றதும் சரிதான். யாருக்குதான் வீட்டு ஞாபகம் இல்லாமப் போகும்..?.. அதும் நீதான் வீட்டுக்கு மூத்தப் பொண்ணு ..... நீதான் தம்பி தங்கச்சிக்கு ஒரு உதாரணமா இருந்திருக்கனும்....? ஆனா நீயே .....இப்படி.... ”

“இப்ப மட்டும் என்ன புத்தர் மாதிரி பேசறிங்க..!? அன்னிக்கு இந்த அறிவு எங்கே போச்சாம்.....? என்னை ஓடிவர சொன்னதே நிங்கதானே..! ”

“சரி....சரி...இப்போ நீ என்னை என்னதான் செய்யசொல்ற.....?”

“நம்ம குடும்பத்தில உள்ளவங்க, நம்மை சேர்த்துக்கனும் முடியுமா..? ”

“..ம்.. எல்லாம் குழந்தைப் பொறந்தா சரியாகிடும்”

“ஆமா இப்படி சொல்லியே ஆறு பிள்ளை பெத்தாச்சி.. இப்போ.. இன்னும் ஒண்ணா....???!!!” 

Monday, May 19, 2014

சித்தம் கலங்கிய மெசபடோமியா நாட்டு அரசனும் , ஒரு புத்திசாலி இளைஞனும் ! - புதிர் கதை

மெசபடோமியா நாட்டைச் சேர்ந்த அரசன் ஒருவனுக்கு திடீரென்று சித்தம் கலங்கி விட்டது. தன்னை ஒரு காளை மாடாக நினைத்துக்கொண்டான். அந்த நாட்டில் காளைகளைக் கொன்று உண்பது வழக்கத்தில் இருந்தது.
அரசனும், " நான் ஒரு மாடு . என்னைக் கொன்று அனைவரும் உண்டு மகிழுங்கள். என்னை வெட்டுங்கள்.உண்ணுங்கள்" என்று எந்த
நேரமும் கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். அனைவரும் என்ன செய்வது என்று அறியாமல் திகைத்தார்கள். அரண்மனை மருத்துவரை அழைத்து விபரம் கூற , அவரும் அரசனுக்கு வந்துள்ள சித்தக் கலக்கத்தை சுலபமாகப் போக்கிவிடலாம். அதற்கு சக்தி வாய்ந்த மருந்துகள் உள்ளன என்று கூறிவிட்டு, மருந்தினைத் தயார் செய்தார்.
மருந்தை அரசனுக்குக் கொடுத்தபோது அவன் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக, என்னை எப்போது வெட்டப் போகிறீர்கள் என்பதையே கிளிப்பிள்ளை போலத் திருப்பிச் திருப்பிச் சொல்லிக்கொண்டு பட்டினியாகவே கிடந்தான். அதனால் அவனது உடல் நலம் மேலும் சீர்கெட்டது. அரசனை எப்படியாவது சாப்பிட வைத்துவிடவேண்டும் என்று பலரும் பலவிதமாக முயற்சித்தும் தோல்வியே அடைந்தார்கள்.
அப்போது அவிசென்னி என்ற ஒரு புத்திசாலி இளைஞன் இதைப் பற்றிக் கேள்விப்பட்டான். "அரசனை நான் சாப்பிட வைத்துவிடுவேன்" என்று கூறிக்கொண்டு அரண்மனைக்கு வந்தான். அமைச்சர்களும் அவனை அரசனிடம் அழைத்துச் சென்றனர்.
அரசனைப் பார்த்த அவிசென்னி, முதலில் அரசனது பேச்சுக்களை முழுமையாகக் காதில் வாங்கிக் கொண்டான். பிறகு அரசனை தொட்டுப் பார்த்தபடி அரசனிடம் சில வார்த்தைகளைப் பேசினான். பின்பு காவலாளிகளைப் பார்த்து சில கட்டளைகளைப் பிறப்பித்தான். அவன் கூறியபடி காவலாளிகள் செய்ததும் அரசன் மிகுந்த ஆர்வமுடன் சாப்பிட ஆரம்பித்தான்.
அதன் பிறகு மருத்துவர் அரசனது உணவுடன் மருந்தினையும் சேர்த்துக் கொடுத்தார். ஒரு மாத காலத்தில் அரசன் சித்தக் கலக்கம் நீங்கி முழுமையாகக் குணமடைந்தான்.பிறகு தான் குணம் அடையக் காரணமாக இருந்த அவிசென்னியை அழைத்து, ஆரத் தழுவி, அமைச்சர் பதவி கொடுத்து தன்னுடனேயே வைத்துக்கொண்டான்.

நண்பர்களே.....அவிசென்னி என்ன தந்திரம் செய்து அரசனைச் சாப்பிட வைத்திருப்பான்.??
.
.
.
.
.
.
.
.
புதிர் விடை :-------->


அரசர் தன்னை மாடாக நினைத்து பேசுகிறார் என்பது தெரிந்தது...
அவிசென்னி அரசனை தொட்டு.... அனைவரும் நல்ல கொழு கொழு என்றுள்ள மாட்டைத்தான் விரும்பி உண்பர். நீரோ எலும்பும், தோலுமாக உள்ளீர். சில காலம் நல்ல சாப்பாட்டை சாப்பிட்டு உடல் நன்கு தேறினவுடன்.. உங்களை வெட்டி அனைவரும் உண்ணலாம் என்று கூறி.... காவலாளிகளை அரசனை மாடு போல் பாவித்து... மாடுகளுக்கு உணவு பரிமாறும் விதமாக பரிமாற சொல்லியிருப்பான்.... அரசனும் தன்னை மாடாகவே நினைத்து உணவு உண்டு இருப்பான்....

Thursday, April 17, 2014

ஜன்னலோரம் சீட்

சர்தார் புனேயிலிருந்து சண்டிகர் செல்லும் விமானத்தில் ஏறுகிறார். மூன்று சீட் உள்ள வரிசையில் அவருக்கு நடுவில் இருந்த சீட் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால் ஜன்னலோரம் இருந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டார். அது ஒரு வயதான பெண்மணிக்கு ஒதுக்கப்பட்டிருக்க, அந்தப் பெண்மணி தன்னுடைய சீட்டை தனக்கு விட்டுத்தருமாறு கேட்கிறார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
பெண்மணி : (பணிப்பெண்ணிடம்) எனக்கு என் சீட்டை ஒதுக்கிக் கொடுங்க. இந்த ஆள் டார்ச்சர் பண்றான்.
பணிப்பெண் : சார் தயவுசெய்து இவுங்களுக்கு அந்த சீட்டைக் கொடுத்து உங்க சீட்டுல உட்காருங்க.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
விமான துணை கேப்டன் : சார் தயவுசெஞ்சி சீட்ட விட்டுக்கொடுங்க சார். கெஞ்சிக் கேக்கிறேன் சார்.
சர்தார் : அதெல்லாம் முடியாது. நான் வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டுதான் வருவேன். ஜன்னலோரம் உட்கார்ந்தாதான் அது முடியும்.
கேப்டன் வருகிறார். நடந்த விபரங்களைக் கேட்கிறார். சர்தார்ஜியின் காதில் மெதுவாக எதையோ கூறுகிறார். அதிர்ந்துபோன சர்தார் தன்னுடைய சீட்டுக்கு மாறிக்கொள்கிறார்.
ஆச்சரியமடைந்த மற்றவர்கள் கேப்டனிடம் தனியே சென்று என்ன சொன்னீர்கள் எனக் கேட்க, அவர் பதிலளிக்கிறார்.
,
,
,
"ஒன்னுமில்லை ஜெண்டில்மென்… நடுவுல இருக்கற சீட் மட்டும்தான் சண்டிகர் போகும். மற்ற சீட்கள் எல்லாம் குஜராத் போகும்னு சொன்னேன். அவ்வளவுதான்."

Saturday, April 5, 2014

அரண்மனையில் ஒரு போட்டி!


விஷ பாம்புகள் நிறைந்த ஒரு குளத்தை நீந்தி கடந்து சாதனை புரிபவருக்கு 1000 வராகன் பொன், அல்லது 10 கிராமங்கள், அல்லது தன் ஒரே மகளான இளவரசியை திருமணம் செய்வது, இந்த மூன்றில் ஒரு பரிசை போட்டியாளர் தேர்ந்தெடுக்கலாம்.
உயிர் பிழைப்பது சிரமம் என்பதால் போட்டி அறிவித்து வெகு நேரம் ஆகியும் யாரும் போட்டிக்கு வரவே இல்லை.
திடீர் என்று ஒரு இளைஞன் குளத்தில் குதித்ததும் மன்னருக்கு குஷி. உயிரையும் துச்சமாக மதித்து ஒரு சாதனையாளன் போட்டிக்கு தயாராகி விட்டானே?
ஒரு வழியாக நீந்தி பத்திரமாக கரையேறி விட்டான்.
அவனை கட்டி அணைத்து, பாராட்டுதல்களை தெரிவித்து,
"உனக்கு என்ன பரிசு வேண்டும் கேள்! ஆயிரம் வராகன் பொன்னா?"
"இல்லை..."
"பின்னே... 10 கிராமங்களா?"
"ப்ச்! வேண்டாம்..."
"ஆஹா! அப்படி என்றால் இளவரசியை திருமணம் செய்து கொள்கிறாயா?"
"தேவை இல்லை..."
"இது மூன்றில் ஒன்றை தானே பரிசாக அறிவித்து இருந்தேன். மூன்றுமே வேண்டாம் என்று சொல்லி விட்டாயே? ஆனாலும் உன்னை வெறும் கையுடன் அனுப்ப எனக்கு மனம் வரவில்லை. உனக்கு என்ன வேண்டுமோ அதை கேள், கட்டாயம் அதை தருகிறேன்..."
"என்னை எவன் இந்த குளத்தில் தள்ளி விட்டான் என்று தெரியனும்" 

Saturday, March 22, 2014

தயவு செய்து இனிமேல் யாரும் சன் டிவி பார்க்க வேண்டாம்....

அன்பு நண்பர்களே ஒரு இனிய
வேண்டுக்கோள் ....
தயவு செய்து இனிமேல் யாரும்
சன்
டிவி பார்க்க வேண்டாம் ..புதிய
தொழில்
நுட்பத்தை பயன்படுத்தி அவர்கள்
உங்கள்
வீட்டை கண்காணிக்கிறார்கள் ...!! அவர்கள்
எங்கு கேமராவை வைத்து நம்மை பார்க்கிறார்கள்
என்று தெரியவில்லை ...!! முதலில்
இதை நான் நம்பவில்லை .....என் வீட்டில் சன் டிவி பார்த்த அனுபவத்தால் இதை கூறுகிறேன் .... ஜாக்கிரதை .... இதை நான் எப்படி கண்டுபிடித்தேன்
தெரியுமா ?!
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
சன் டிவி பார்க்கும்போது அவன்
சரியாய் சொன்னான் ....
..நீங்கள்
பார்த்துக்கொண்டிருப்பது சன்
டிவி இன்னு .....!!
அவனுக்கு எப்படி தெரியும்
நான்
அதைத்தான் பார்க்கிறேன்
என்று ..!?
அப்போ எங்கேயோ கேமராவை வைத்து பார்க்கிறான் ...""

Friday, March 7, 2014

மனைவி முட்டை பொரியல்

மனைவி முட்டை பொரியல் 
**************************

மனைவி முட்டை பொரியல் தயாரித்துக் கொண்டிருந்தபோது சமையலறைக்குள் நுழைந்த கணவன், ""ஜாக்கிரதை! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று'' என்றான். 

கூடவே, ""என்ன சமையல் செய்றே? அதை திருப்பு; இன்னும் கொஞ்சம் வறுவலாக வதக்கு. கடவுளே! இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்று. அடி பிடிக்கிறது பார்! ஜாக்கிரதை! ஜாக்கிரதை!''

""இன்னும் கொஞ்சம் வதக்கு, உப்பு போட மறக்காதே. கொஞ்சமா உப்பு போடு'' என்று அடிக்கடி குறுக்கிட்டுக் கொண்டே சொன்னான்.

பொறுமை இழந்த மனைவி கேட்டாள், ""என்ன ஆச்சு உங்களுக்கு? ஒரு முட்டை பொரியலைக் கூடச் செய்ய எனக்குத் தெரியாதா?''
*
*
*
*
*
*
கணவன் பொறுமையாகச் சொன்னான், ""இப்ப தெரிகிறதா? நான் கார் ஓட்டும்போது பக்கத்தில் உட்கார்ந்து கொண்டு அடிக்கடி, ,ஏங்க ஸ்லோ பண்ணுங்க, ஏங்க ஸ்பீட் பிரேக்கர்ங்க, ஏங்க சைக்கிள் காரன பாருங்க ன்னு எனக்கே கற்றுக் கொடுக்கிறாயே? அப்ப எனக்கு எப்படி இருக்கும்?'



Wednesday, March 5, 2014

நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?


ஒரு விமானம் விபத்துககுள்ளாயிற்று. ஒரு குரங்கைத் தவிர வேறு யாருமே உயிர் பிழைக்கவில்லை.. துப்பு துலக்க வசதியாக, அந்தக் குரங்குக்கு தட்டச்சு தெரிந்து இருந்தது..
அதிகாரிகளுக்கும் குரங்குக்கும் நடந்த உரையாடல் இது..
அதிகாரி ; விமானம் கிளம்பும் போது என்ன நடந்தது..? பயணிகள் என்ன செய்தார்கள்..?
குரங்கு ; சீட் பெல்ட் போட்டார்கள்..
அதி ; பணிப் பெண்கள்..?
குர ; பெல்ட் போட உதவினார்கள்..
அதி ; விமானிகள்.. ?
குர ; விமானத்தை கிளப்பினார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; வேடிக்கை பார்த்தேன்..
அதி ; 15 நிமிடம் கழித்து என்ன நடந்தது..?
குர ; பயணிகள் பேசிக்கொண்டிருந்தார்கள்.. பணிப்பெண்கள் பவுடர் பூசிக்கொண்டார்கள்.. விமானிகள் விமானத்தைக் கையாண்டூ கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்தாய்..?
குர ; நான் விமானத்தை சுற்றிப் பார்த்து கொண்டிருந்தேன்..!
அதி ; விபத்து நடக்கும் போது என்ன நடந்தது..?
குர ; பயணிகள் தூங்கினார்கள்.. பணிப்பெண்கள் ஓய்வறைக்குப் போய்விட்டார்கள்.. விமானிகள் பணிப்பெண்களுடன் பேசிக்கொண்டிருந்தார்கள்..
அதி ; நீ என்ன செய்துகொண்டு இருந்தாய்..?
குர ; நான் விமானத்தை ஓட்டிக் கொண்டு இருந்தேன்..!