Monday, August 4, 2014

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

நாராயணசாமி ஒரு ஆய்வாளர்.

ஒரு நாள் கையில் ஒரு பாட்டிலும் ஒரு ஸ்பூனுமாக நாராயணசாமியின் ஆய்கவத்தினுள் நுழைந்தான் ஒரு ஆசாமி.

"வாங்க சார், என்ன வேணும் உங்களுக்கு?" கேட்டார் நாராயணசாமி.

"நான் ஒன்றைத் தருகிறேன், அதை ருசித்துப் பார்த்துச் சொல்கிறீர்களா...?" என்றான் அந்த ஆசாமி.

"நிச்சயமாக... தாருங்கள்"

உடனடியாக அந்த ஆசாமி, தன் கையில் வைத்திருக்கும் பாட்டில் இருந்து ஒரு ஸ்பூன் திரவத்தை ஊற்றி நாராயணசாமியிடம் கொடுத்தான்.

அதை வாயில் ஊற்றி, ருசித்துப் பார்த்த நாராயணசாமி சற்றே முகச் சுளிப்புடன்....

"கொஞ்சம் உப்பாக இருக்கிறது ..." என்றார்.

"நல்லவேளை உப்பாகத்தானே இருக்கிறது. இனிப்பாக இல்லையே...."

"இல்லை சார். ஏன்.. என்னாயிற்று?" புரியாமல் நாராயணசாமி கேட்க,

அந்த ஆசாமி சொன்னான்,

"வேற ஒண்ணும் இல்லை சார் ... என்னை டெஸ்ட் பண்ணின டாக்டர் எனக்கு சர்க்கரை நோய் இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்து, எனது சிறுநீரை டெஸ்ட் பண்ணச் சொன்னார். நல்லவேளை நீங்கள் சர்க்கரை இல்லை ... உப்பாக இருக்கிறது எனத் தெரிவித்து விட்டீர்கள். நன்றி"