Monday, March 20, 2017

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?

குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தையின் ஞாபக சக்தியை அதிகரிப்பது எப்படி?
நாம் பார்க்கும், கேட்கும், உணரும், சுவைக்கும், முகரும் அனைத்துமே நமது ஞாபகங்கள் ஆகும். இது முதலில் குறைந்த நேரமே மனதில் இருக்கும் (சென்சரி மெமரி). உடனே மறந்து விடும். இந்த சென்சரி மெமரியில் நாம் முழு கவனத்தை செலுத்தி ஆழ்ந்து கவனித்தால் அது ஷார்ட் டெர்ம் மெமரி ஆக பதிவாகும். இதுவும் சில மணித்துளிகளுக்கு மட்டும் இருக்கும்.
ஷார்ட் டெர்ம் மெமரி ஐ திரும்பத் திரும்ப செய்யும்போது அது நாள் பட்டஞாபக சக்தியாக மாறும். எனவே ஞாபக சக்திக்கு மிகவும் முக்கிமானது இரண்டு: ஆர்வம் மற்றும் கவனம், திரும்ப திரும்ப செய்தல். மேலும் நாள் பட்ட ஞாபகம்கூடமறக்க வாய்ப்பு உள்ளது, இதுவும் நல்லது தான். சில சமயம் வாழ் நாள் முழுவதும் நினைவில் இருக்கும்.

நாள் பட்ட ஞாபகத்தை இரண்டு வகையாக பிரிக்கலாம்: explicit & implicit
explicit என்பது கொஞ்சம் யோசித்தால் நினைவுக்கு கொண்டுவர முடியும்.
implicit என்பது யோசிக்க தேவை இல்லாமல் உடனே நினைவுக்கு கொண்டு வருதல்.
சில குழந்தைகள் நன்றாக படிப்பார்கள். ஆனால் அந்த பாடத்தை பற்றி கேட்டும் போது ரொம்ப யோசிப்பார்கள். இதற்காக பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. கீழே கொடுக்கப்பட்டுள்ள சில விதிமுறைகளை முறையாக கடைப்பிடித்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
இனி குழந்தைகளின் நினைவு திறனை அதிகரிக்கும் வழிகள்
* எதையும் தாய் மொழியிலேயே சிந்திக்க வேண்டும், நீங்கள் படிப்பது ஆங்கிலமோ, ஹிந்தியோ, பிரெஞ்சோ – உங்கள் தாய் மொழி என்னவோ அதில் சிந்தித்து மனதில் பதிய செய்ய வேண்டும்.
* புரியாமல் எதையும் படிக்ககூடாது. ஒரு வரி புரிய ஒரு நாள் ஆனாலும் பரவாயில்லை.
* முழு கவனம் மிக அவசியம்.
* mnemonics வைத்து படிப்பது ஒரு கலை. அதை உங்கள் குழந்தைக்கு கற்று கொடுங்கள்.
உதாரணம்: news – north, east, west, south
* படித்தவுடன் எழுதி பார்க்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். ஹோம் வொர்க் என்ற பெயரில் கடமைக்கு எழுதும் சடங்கு பயனில்லை.
* படங்களுடன் கூடிய தகவல்கள் மனதில் பதியும். படவிளக்கங்களை திரும்ப திரும்ப வரைந்து பார்க்கச் சொல்லவேண்டும்
* நல்ல உறக்கம் அவசியம். குறைந்தது 8 மணி நேர தூக்கம் கண்டிப்பாக தேவை.
* இரவில் சீக்கிரம் தூங்கி அதிகாலை படிக்கும் படி சொல்லவேண்டும்.
* தூங்க போகும் முன் அன்று படித்த அனைத்தையும் ஒரு முறை மேலோட்டமாக நினைவு படுத்தி பார்க்க வேண்டும். அப்படி செய்யும் போது நாம் தூங்கினாலும் நம் மூளையின் சில மூலைகள் விழிப்புடன் இருந்து தகவல்களை ஷார்ட் டெர்ம் மெமரியில் இருந்து லாங் டெர்ம் மெமரியில் பதிவு செய்து கொண்டு இருக்கும். இது மிக முக்கியமான பயிற்சி ஆகும்.
* மாவு சத்து உள்ள உணவுகள் மந்த நிலையை ஏற்படுத்தும், எனவே புரதம் நிறைந்த எளிதில் செரிக்கும் உணவை சேர்த்துகொள்வது நல்லது.

Saturday, February 25, 2017

ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபாவில் உருவாகும் கடவுளைக் கண்டுபிடிக்கப்போகும் தொலைகாட்டி!

பூமியில் இருந்து சுமார் பதினாறு இலட்சம் கிலோமீற்றர் தொலைவில் நிலைநிறுத்தப்படவுள்ள, உலகின் விலையுயர்ந்த தொலைகாட்டி ஏறக்குறைய பூர்த்தி நிலையை எட்டியுள்ளது.
ஏறக்குறைய எட்டு பில்லியன் டொலர் (ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் கோடி ரூபா!) செலவில் உருவாகிவரும் ‘ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தத் தொலைகாட்டியை கடந்த இரண்டு வருடங்களாக உருவாக்கி வருகிறது நாஸா!
கண்ணாடிகளுக்குப் பதில், தங்கத்தாலான பதினெட்டு அறுங்கோணங்கள் ஒன்றாகப் பொருத்தப்பட்டுள்ளன. இதன் விட்டம் மட்டும் 6.5 மீற்றர். இதன்மூலம், விண் கதிர்கள் ஊடுருவ மாட்டா. இந்தப் பாரிய தங்கப் பரப்பின் மூலம், சூரியனில் இருந்து நட்சத்திரங்கள் பெறும் ஒளியைவிட ஏழு மடங்கு அதிகமான ஒளியைப் பெற்றுக்கொள்ளும். அகச்சிவப்புக் கதிர்கள் மூலமே தான் சேகரிக்கும் தகவல்களைப் பரிமாறவிருப்பதனால், கடும் குளிரான சூழலில் இது இயங்கத் தேவையான முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
குறித்த தொலைவில் இந்தத் தொலைகாட்டி நிலைநிறுத்தப்பட்டால், ‘பிக் பாங் தியரி’ என்று சொல்லப்படும் அண்டத்தின் முதல் வெடிப்புக்கான காரணத்தை ஆராய முடியும் என்று நாஸா நம்புகிறது. அதாவது, இந்தப் பேரண்டம் உருவாவதற்குக் காரணமாக இருந்த முதல் ஒளியைக் கண்டுபிடிக்க முடியும். இந்த ஒளியே கோள்கள், நட்சத்திரங்கள் அடங்கிய விண்மீன் திரள்கள் உருவாகக் காரணம்.
அந்த ஒளியை இந்தத் தொலைகாட்டி மூலம் கண்டுபிடிக்க முடியும் என்றும், இதன்மூலம் பிரபஞ்சத்தின் உருவாக்கம் பற்றிய பல நம்ப முடியாத, ஆச்சரியம் தரும் தகவல்களைப் பெற முடியும் என்றும் விண்மீன் திரள்களின் நடுவே காணப்படும் ‘பிளாக் ஹோல்’ எனப்படும் கருந்துளையை ஆராய முடியும் என்றும் நாஸா உறுதியாக நம்புகிறது.
என்றாலும், இந்தத் தொலைகாட்டியை அவ்வளவு எளிதாக விண்ணில் செலுத்தி விட முடியாது என்றும் நாஸா தெரிவித்துள்ளது.
தற்போது அமெரிக்காவின் மேரிலேண்டில், க்றீன்பெல்ட்டில் மிக மிகப் பாதுகாப்பாக மூடி வைக்கப்பட்டிருக்கும் இந்தத் தொலைகாட்டி முழுமைபெற்றதும் இதை, காலநிலைப் பண்புகளால் தாக்கப்படமுடியாத ஒரு கொள்கலனுக்குள் வைக்கப்படவேண்டும். பின்னர் இதை ஏவுவதற்காக அன்ட்ரூஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படவேண்டும். இது மிக மிகச் சவால்கள் நிறைந்தது.
ஒரு ட்ரக் மூலம் மிக மிக மெதுவாகவும், மென்மையாகவும் இரவு நேரத்தில் இடம் மாற்றப்பட வேண்டும். வீதிகளில் மேடு, பள்ளம், குழிகள் எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்துவதற்காக சில வாகனங்கள் இந்த ட்ரக்கின் முன்புறம் செல்லும். இதற்காக இந்த இரண்டு நகரங்களினதும் பிரதான வீதிகளை மூட வேண்டியிருக்கும். இவ்வாறு மிகக் கவனமாக எடுத்துச் செல்லப்படும் தொலைகாட்டி, இராணுவத்துக்குத் தேவையான பொருட்களை எடுத்துச் செல்லும் சி-5சி என்ற விசேட ரக விமானத்தில் மிகக் கவனமாகப் பொருத்தப்படும்.
இந்த விமானத்தின் மூலமாக ஹூஸ்டன் ஏவுதளத்துக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு விண்வெளியைப் போன்ற புறச்சூழல் கொண்ட - அதாவது ஈர்ப்புவிசை அற்ற - ஒரு அறையில் மிதக்கவிடப்பட்டு பரிசோதிக்கப்படும்.
பின்னர் அங்கிருந்து லொஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கே, சூரிய ஒளியில் இருந்து தப்புவதற்கான பாதுகாப்புக் கவசங்கள் மற்றும் திசையறை தொழில்நுட்பங்கள் என அனைத்தும் பொருத்தப்படும். பின்னர், வட அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவுக்கு, பனாமா கால்வாய் வாயிலாக கவசப் படகு ஒன்றில் எடுத்து வரப்படும். அங்கிருந்தே இந்தத் தொலைகாட்டி விண்ணில் ஏவப்படும்.
விஞ்ஞானிகளின் தற்போதைய கணிப்பின்படி அடுத்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தத் தொலைகாட்டி விண்ணுக்கு ஏவப்படும் என்று தெரியவருகிறது. எனினும், 2019ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமளவிலேயே இது விண்ணில் நிலைநிறுத்தப்படும் எனத் தெரியவருகிறது.
பூமியில் இருந்து மிக மிக அதிக தொலைவில் நிலைநிறுத்தப்படும் என்பதால், இதில் ஏதும் பழுதுகள் ஏற்பட்டால் அங்கு போய் அதைச் சரிசெய்வது முடியாத காரியம். எனவே, தற்போது இந்தத் தொலைகாட்டியை விஞ்ஞானிகள் மிகக் கவனமாக உருவாக்கி வருகிறார்கள்.

Monday, January 30, 2017

வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ?

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் அல்ல..!
அந்நாட்களில் வீட்டு சுவர்களில் ஏன் வறட்டி காய வைக்க வேண்டும் ? இந்தப் பழக்கம் ஏன் வழக்கமானது?
ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை வீட்டுச்சுவரின் வெளிப்புறத்தில் வறட்டி காய வைக்கும் பழக்கும் தமிழகம் முழுவதும் கிராமப்புறங்களில் காணப்பட்டதை நாம் அறிவோம். அது ஏன்?
அதற்கு முக்கிய காரணம், வறட்டிகளால் சூழப்பட்ட சுவர்கள் வெளியில் எந்த தட்பவெப்ப நிலை இருந்தாலும் சரியாக 28.35°C வெப்பநிலையை வீட்டிற்குள் வழங்கும். இந்த விஞ்ஞான உண்மை உங்களை திகைக்க வைக்கலாம்.! மேலும் படியுங்கள்.
அப்போதெல்லாம் தடுப்பூசியோ மருந்து மாத்திரையோ தமிழகத்தில் இல்லை. காரணம் பசு வறட்டியில் உள்ளது. நாட்டு மாடுகளின் A2 சாணம் என்பது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி என்பது அறிவியல்.
18 மாதங்கள் நிரம்பிய ஒவ்வொரு பசுவின் சாணமும் ஆயிரம் தடுப்பூசிக்கு சமம். அப்படியான சாணத்தை தனித்தனியாக ஒவ்வொருவர் முகத்திலும் தனித்தனியாக அடிக்க முடியாது என்பதால் வீட்டுச்சுவற்றில் அடித்து வந்தனர். இதன் மூலம் முழுமையாக சுத்திகரிக்கப்பட்ட ஒரு Safe Zone-ல் நம் தாத்தா பாட்டி காலம் வரை வாழ்ந்தார்கள் என்றால் நம்ப முடிகிறதா?
அதுபோல, வளி மண்டலத்தில் இருந்து வரும் புற ஊதா கதிர்கள் மற்றும் காஸ்மிக் கதிர்கள் இந்த நன்கு காய்ந்த வறட்டியில் படும்போது, மின்காந்த சக்தி உந்தப்பட்டு அந்த வீடே அணுக்கதிர்கள் கூட துளைக்க முடியாத ஒரு எஃகு அரணாக மாறிப்போகும். ஆனால் இதன் பலன் 15 நாட்களுக்கு மட்டுமே. இதனாலேயே சோழர்களின் கோட்டையை ஆங்கிலேயர்களால் வீழ்த்த முடியவில்லை என்பது தனிக்கதை.
மேலு‌ம், இம்மாதிரியான வறட்டி தட்டும் பழக்கம் கைகள் மூலமாக உடலில் ஏற்படும் கெட்ட கொழுப்புகளை அகற்றி சர்க்கரை நோயை கட்டுக்குள் இருக்க வைத்தது. சுற்றிலும் வறட்டிகளை கொண்ட வீடுகளில் 48 நாட்கள் புழங்கி வந்தால் அலர்ஜி, கேன்சர், இருதய கோளாறு போன்றவை சரியாகும் என சித்தர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலைநாட்டினர் அவற்றின் மகிமையைப் புரிந்துக்கொண்டு தான் தற்போது வறட்டியை அதிக அளவில் தங்கள் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர்.
வறட்டி தயாரிக்கும் முறைக்கு காப்புரிமையும் பெற்றுள்ளனர். ஆனால் நாமோ, பகுத்தறிவு என்று நாம் நமது முன்னோரின் சம்பிரதாயங்களில் இருக்கும் விஞ்ஞான அறிவைப் புரிந்துகொள்ளாமல்
கேலிசெய்து கேவலப்படுத்துகிறோம் .
நம் முன்னோர் ஒன்றும் முட்டாள்கள் இல்லை..!
இப்போது நாம் பேசும் பகுத்தறிவு அவர்களின் கால் தூசுக்கு ஈடாகாது..!
நம் முன்னோரின் பழக்கவழக்கங்களை நம்மால் நடைமுறைப்படுத்த முடியாவிட்டாலும் பரவாயில்லை...
அவற்றைக் கேலி செய்யாமல் இருந்தாலே போதும்..!

Monday, January 16, 2017

மரபு மருத்துவம்: கொசுக் கடி தப்பிக்க இயற்கை வழி

‘கொசு மாதிரி இருந்திட்டு எவ்ளோ பெரிய வேலை செய்யுறான் பாரு’ என்று இனிக் கிண்டலுக்குக்கூடச் சொல்ல முடியாது. காரணம் சமீபகாலமாகச் சிறிய கொசுக்கள் மிகப் பெரிய வேலையையும் திறம்படச் செய்துகொண்டிருக்கின்றன. சாதாரணக் காய்ச்சல் தொடங்கி டெங்கு, ஜிகா வரை உண்டாக்கும் மிகப் பெரிய காரணியாகச் சின்னஞ்சிறு கொசு உருமாறி இருக்கிறது. சில மாதங்களுக்கு மட்டும் தலை காட்டாமல் ஓய்வெடுத்துவிட்டு, பெரும்பாலான மாதங்களில் ஊரெங்கும் கொசுக்கள் ஒயிலாக வந்துகொண்டிருக்கின்றன.
கொசுக்களை அழிக்கக் கொசுவர்த்திச் சுருள், லிக்விடேட்டர் போன்றவற்றை அதிகளவில் பயன்படுத்தும்போது, அவற்றிலுள்ள வேதியியல் பொருட்கள் காரணமாகத் தலைவலி, நுரையீரல் தொந்தரவுகள் உருவாகுவதற்கு அதிகச் சாத்தியம் உண்டு. இன்னும் சில வீடுகளில் எலி, கரப்பான் பூச்சிகளைக் கொல்லப் பயன்படுத்தும் தெளிப்பான்களை, கொசுக்களை அழிக்க வீடு முழுவதும் தெளிக்கும் ‘புத்திசாலித்தனம்’ உயிரைப் பறிக்கும் அளவுக்கும் கொண்டு செல்லலாம். சரி, கொசுக் கடியிலிருந்து தப்பிக்க இயற்கை அமைத்துக் கொடுத்த வழிமுறைகள் என்ன?
வாசனை குளியல்
குளிக்கும்போது, நீரில் வாசனை அதிகம் தரும் கற்பூரவல்லி, கறிவேப்பிலை, துளசி, செம்பருத்தி இதழ்கள், எலுமிச்சை இலைகள், உலர்ந்த நெல்லி போன்றவற்றைக் கலந்து குளிக்கலாம். புதினா, திருநீற்றுப் பச்சிலையைக் கசக்கி உடலில் தேய்த்த பின்னர் குளிக்கலாம். ‘நலங்கு மாவு’ போன்ற மணம்மிக்க இயற்கை குளியல் பொடிகளைப் பயன்படுத்துவதும் சிறந்தது. இயற்கையாக உடலில் வாசனை கமழும்போது கொசுக்கள் கடிப்பதற்குத் தயக்கம் காட்டுவதாக ஆய்வுகள் கூறுகின்றன. காலை, மாலை என இருவேளை நீராடி, உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்வதும் நல்லது.
மூலிகை புகை
வீட்டுக்கு முன் வேப்பிலை, நொச்சி, மாவிலை, மா மரத்தின் பூக்களைக் கொண்டு புகை போடலாம். கிராமங்களில் பின்பற்றப்படும் இந்த முறை மனிதர்களோடு சேர்த்து, கால்நடைகளையும் கொசுக்கடியிலிருந்து காப்பாற்றும். மாலை வேளையில் வீட்டு அறைகளில் சாம்பிராணியோடு உலர்ந்த வேப்பிலை, நொச்சி இலை, குப்பைமேனி இலைகளைக் கொண்டு சிறிது நேரம் புகை காட்டலாம். அந்தக் காலத்தில் அரண்மனை விருந்தினர்களை வரவேற்க, அகில்கட்டை புகைதான் முதல் தேர்வு. வாய்ப்பு இருந்தால் அகில்கட்டை புகையூட்டி, வீடுகளைத் தூய்மைப்படுத்தலாம்.
வசம்பு சுட்ட கரி, தர்ப்பைப்புல், எலுமிச்சை புல், மா இலை / பூ, வேப்பிலை, நொச்சி, தேங்காய் சிரட்டை போன்றவற்றை ஒன்றாகக் கலந்து புகை போடலாம் அல்லது இவற்றை நீர்விட்டு அரைத்து வில்லைகளாக வைத்துக்கொண்டும் புகை போடலாம்.
வியர்வை நாற்றத்தைத் தவிர்க்க வேதியியல் கலவை நிறைந்த வாசனை திரவியங்களுக்குப் பதிலாக, சந்தனக் கலவையைப் பயன்படுத்துவது சிறந்தது. கற்பூரம், எலுமிச்சை சாற்றை நீரில் கலந்து அறைகளில் தெளிக்கலாம். சித்த மருந்தான கற்பூராதி எண்ணெயை லேசாக உடலில் தடவிக்கொண்டால், கொசுக்கடியின் தாக்குதலில் இருந்து தப்பிக்கலாம். காடுகளில் வாழும் மக்கள், கொசுக்கடி மற்றும் பாம்பு கடியிலிருந்து தப்பிக்க வேப்பெண்ணெயைத் தங்கள் உடலில் தடவிக்கொள்வது குறிப்பிடத்தக்கது.
கொசு கடித்துவிட்டால்…
வீட்டைச் சுற்றிச் சுகாதாரமான சூழலை உண்டாக்குவது, தேவையற்ற இடங்களில் நீர் தேங்குவதைத் தவிர்ப்பதன் மூலம் கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்தலாம். கொசு வலை அமைப்பதும் பாதுகாப்பான உத்தி.
கொசு கடித்த பின் உண்டாகும் அரிப்புக்கு அருகன் தைலம், குங்கிலிய வெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றைத் தடவலாம். குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்குப் புண் ஏற்படாமல் இருக்க இந்த முறை நிச்சயம் உதவும்.
கொசு விரட்டும் தட்டான்கள்
தட்டான்களும் பறவைகளும் நம்மருகே வாழ்வதற்கான சூழல் இருந்தபோது, கொசுக் கூட்டம் நம்மைச் சுற்றி ஆதிக்கம் செலுத்தவில்லை. ஏனென்றால், தட்டான்களுக்கும், சில பறவைகளுக்கும் முக்கிய உணவே கொசுதான். கொசுக்களின் எண்ணிக்கை உச்சத்தைத் தொட்டதற்கு நம் சுற்றுச்சூழல் சீரழிக்கப்பட்டதும் முக்கியக் காரணம். இனிமேலாவது, இயற்கையாகக் கொசுக்களை விரட்டும் கொசுவிரட்டி மூலிகைகளைப் பயன்படுத்திக் கொசுக்களின் ஆதிக்கத்தைத் தடுப்போம்!