Saturday, September 7, 2019

சிலிகா ஜெல்

புது ஷூ, ஹேண்ட் பேக், சூட்கேஸ் மாதிரியானவைகளை வாங்கும் போது அது உள்ள சின்ன சின்ன பாக்கெட்ஸ்ல "சிலிகா ஜெல்"லை போட்டு வச்சிருப்பாங்க...

நாம் அதை தூக்கி எறிஞ்சிடுவோம்... அதோட பயன்கள் தெரியாமலேயே...

நம்மோட தினசரி வாழ்க்கையில அது எந்த அளவுக்கு உபயோகப்படுதுன்னு பார்க்கலாமா...

1. நம் சமையல் அறை எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும் ஏரியா.. இதனாலேயே மசாலா பொருட்கள், சக்கரை போன்றவைகள் அடுப்படி ஈரப்பதத்தாலேயே எளிதில் கெட்டியாகி விடும். இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டை மசாலா பொருட்கள் வைக்கும் இடங்களில் ஒரு ஸ்டிக்கர் மூலம் ஒட்டி வைத்தாலே போதும். ஆதிக்கப்படி ஈரப்பதத்தை இந்த சிலிகா ஜெல் உறிஞ்சி எடுத்துக்கொண்டு நமது மசாலா ஐட்டங்களை பிரெஸ்ஸாகவே வைத்திருக்கும்.

2. எதிர்பாராத விதமாக தண்ணீரில் விழுந்த நம் மொபைல் போனை அதன் பேட்டரி, மெமரி கார்டு போன்றவற்றை கழட்டி விட்டு ஒரு பவுலில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு அதனுள் ஈரமான மொபைலை போட்டு வைத்தாலே போதும். தண்ணீரில் விழுந்த மொபைல் புதுசு போல ஆகிவிடும். ஆனால் மீண்டும் சார்ஜ் செய்யும் முன் இந்த ஜெல் பாக்கெட்டுகளை எடுத்துவிட்டு ஒரு இரவு முழுதுமே காற்றுவெளியிலே வைத்திருந்து விட்டு பிறகு மட்டுமே சார்ஜரில் இணைக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

3. நமது முக்கியமான ஆவணங்களான பத்திரம், பிறப்பு சான்றிதழ், திருமண சான்றிதழ், பான் கார்ட், ஆதார் கார்ட் போன்றவை நாசமாகிவிடாமல் இருக்க, இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை இவை வைக்கப்பட்டுள்ள பெட்டியிலோ, பைலிலோ போட்டு வைத்தால் போதும். நமது

4. துவைத்து ஈரமான துண்டு அல்லது ட்ரெஸ் ஐட்டங்களை அவசரமாக காயவைக்க வேண்டுமென்றால் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு ஊற வைத்தாலே போதும். துணிகள் காய்ந்துவிடும்.

5. நாம் அன்றாடம் பயன்படுத்தும் ரேசர்கள் பிளேடுகள் போன்றவை ஈரம் படுவதால் சீக்கிரமே மழுங்கி போய்விடும். இதனை தவிர்க்க இவற்றை போட்டு வைக்கும் பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வையுங்கள்.

6. நமது விளையாட்டு பொருட்கள் போட்டு வைக்கும் பை அல்லது உடற்பயிற்சி கருவிகளை வைக்கும் பை இவற்றில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால், தேவையற்ற துர்நாற்றம், பாக்டீரியா, காளான் படருதல் போன்றவற்றை தவிர்க்கலாம்.

7. நமது வளர்ப்பு பிராணிகளின் உணவு பாக்கெட்டுகள் அல்லது டப்பாக்களில் வெளியில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை ஒட்டி வைத்தால் சீக்கிரம் கெட்டு போவது தவிர்க்கப்படும்.

8. நகை பெட்டிக்குள் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகள் சிலவற்றை போட்டு வைத்தால் நகைகள் மங்கலாக ஆகிவிடாமல் பளபளப்புடனேயே இருக்கும்.

9. வருடாவருடம் உபயோகப்படுத்தும் டெக்ரேசன் பொருட்களை போட்டுவைக்கும் பெட்டிக்குள் சில சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை போட்டு வைத்தால் இந்த ஐட்டங்கள் மங்கி போகாமல் அதே பொலிவுடன் இருக்கும்.

10. நமது வீட்டின் ஜன்னல்கள், வாசற்படி போன்ற இடங்களில் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை குழந்தைகள் கைக்கு எட்டாத இடத்தில் கட்டி வைப்பது தேவையற்ற ஈரப்பதத்தினை தவிர்க்க உதவும்.

11. நமது செருப்பு, ஷூ, ஷாக்ஸ் போன்றவற்றை வைக்கும் இடங்களில் மறக்காமல் இந்த சிலிகா ஜெல் பாக்கெட்டுகளை ஒட்டி வையுங்கள். தேவையற்ற துர்நாற்றம் போன்றவற்றை தவிர்க்க உதவும்.

Note: இந்த பாக்கெட்டுகளை ஒரு போதும் ஓபன் செய்து உபயோகித்துவிடாதீர்கள். கவனம்..!!
.
.
.
Selvarajstores Supermarket Ponnamaravathi WhatsApp .https://wa.me/918124895764