Sunday, November 3, 2013

*** புதிர் விரும்பிகளுக்கு மட்டும் ***


முன்னொரு காலத்தில் பாண்டிய நாட்டின் அரசபைக்கு மூன்று இளைஞர்கள் வந்தார்கள். அவர்கள் யார் என்று அரசன் விசாரித்தான்.

"அரசே, நாங்கள் மூவரும் ஒவ்வொரு வகையிலே திறன் மிக்கவர்கள். எங்களுக்கு நுட்மனான உணர்வு உள்ளது. இதில் எங்களில் யார் சிறந்தவர் என்பதில் விவாதம் எழுந்துள்ளது. அதை இந்த அறிஞர்களின் சபையிலே தீர்த்துக்கொள்வதற்காகவே இங்கே வந்துள்ளோம்" என்றார்கள்.
"சரி உங்கள் நுட்பமான உணர்வு என்ன என்பதை விளக்கமாகச் சொல்லுங்கள் " என்றான் அரசன்.

" அரசே, நான் உணவில் நுட்பமான உணர்வு கொண்டவன். அடுத்தவன், பெண்களைப் பற்றிய நுண்ணறிவு கொண்டவன். மற்றவன் படுக்கை விஷயத்தில் சிறந்த அறிவுடையவன்" என்றார்கள்.

"அப்படியா? " என்று ஆச்சர்யப்பட்ட அரசன் அவர்களைச் சோதித்துப் பார்த்து தீர்ப்புக் கூற நினைத்தான்.

அதனால் மூனாவதான படுக்கை அறிவாளனை அழைத்தான். ஒரு கட்டிலின்மேல் ஏழு இலவம் பஞ்சு மெத்தைகளை அடுக்கி, அதன்மேல் விலை யுஅர்ந்த மென்மையான பட்டுத் துணியை விரித்து அதன்மேல் படுக்கும்படி கூறினான்.அவனும் படுத்தான். சிறிது நேரத்தில் முதுகில் ஏதோ கடிபட்டவன்போல் எழுந்து, " அரசே, இந்த மெத்தைக்குள் ஏதோ ஒன்று இருக்கிறது. அது எனது முதுகை உறுத்துகிறது " என்றான். அரசன் பணியாட்களிடம் மெத்தையை ஆராயும்படி கூறினான். ஏழாவது மெத்தைக்கு அடியிலே ஒரு தலைமுடி கிடந்தது. அரசன் அவனது நுட்பமான அறிவைக் கண்டு வியந்தான்.

பேரழகான பெண் ஒருத்தியை, வாசனைத் திரவியங்கள் கலந்த நிரில் குளிக்கவைத்து, சந்தனம், ஜவ்வாது பூசி, பரிமள சுகந்தங்கள் வீசும் வாசனை சாம்பிராணிகளை ஒரு அறையிலே கொளுத்தி வைத்து, அந்தப் பெண் தலையிலே மணம் வீசும் மல்லிகைப் பூக்களைச் சூடி, அவளையும் அவனையும் அந்த அறைக்குள் அனுப்பி வைத்தான் அரசன்.உள்ளே சென்றதுமே, அவள் கரங்களை ஆசையுடன் பிடித்தான் அவன். உடனே, " அய்யோ, இவள்மேல் ஆட்டின் மணம் வீசுகிறதே" என்றபடி அறையைவிட்டு வெளியே வந்துவிட்டான்.அரசன் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரித்தான். அவள் குழந்தையாக இருந்தபோது ஆட்டுப்பால் குடித்து வளர்ந்தாள் என்ற விஷயம் தெரியவந்தது. இரண்டாமவனின் நுட்பமான உணர்வைக் கண்டு வியந்தார்.

அதன் பிறகு மூன்றாவது இளைஞனை தன்னுடன் விருந்துண்ண அழைத்தார் அரசர்.இலையின் முன் அமர்ந்தவன்.அவனோ தனது இலையில் பறிமாறப்பட்ட சோற்றைக் கண்டதுமே, மூக்கைப் பொத்திக்கொண்டான். அரசன் என்னவென்று கேட்க, " அரசே, இந்த சோற்றில் பிணவாடை வீசுகிறதே" எப்படிச் சாப்பிடுவது? " என்றான்.

அரசன் அந்த அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது என்று விசாரித்து, பிறகு அதன்மூலம் அது எங்கே பயிரிடப்பட்டது என்பதையும் விசாரித்து அறிந்தான். அந்த அரிசி விளைந்த நிலத்தில் சுடுகாட்டுச் சாம்பலை உரமாகப் போடப்பட்டதை அறிந்து , அரசன் வியப்படைந்தான்.
பிறகு அரசபை கூடியது.

அரசன் அந்த மூவரில் யார் அதிநுட்பமானவன் என்று திர்ப்பும் கூறினான்.
நண்பர்களே அரசன் கூறிய தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும்?

.
.
.
.
.
.