Monday, November 16, 2015

விஞ்ஞானமும் மெய்ஞானமும் : அணுக்கள்

அணு என்பதை கண்ணால் பார்க்க முடியாது, தொட்டு உணர முடியாது, நுகரவும் முடியாது. அப்படிப் பார்க்க முடியாத, உணர முடியாத, நுகர முடியாத
அணுக்களால் தான் நமது உடன், நம் உண்ணு உணவு, உடுத்தும் உடை,
குடிக்கும் தண்ணீர், நம்மை தாங்கும் நிலம், மரம், செடி, கொடி மற்றும்
அனைத்து, எல்லாமுமாக உருவாகி இருக்கிறது. அணு கண்ணுக்கு
தெரியும் பால் வெளி முழுவதும் இச்சக்தியின் வெளிப்பாடே, இந்த
அணு தான் பால்வெளியின் தோற்றதிற்கும், பரிணாமத்திற்கும்,
உருவ அமைப்பிற்கும் தொடர்புடைய மறைபிற்கும் ,
மற்றும் பல கேள்விகளுக்கும் விடையாகும் என்கிறார் ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன். அந்த அணுக்களுக்குள் உப அணுக்கள் மறைந்திருக்கிறது.
*************************************
அணுவில் அணுவினை ஆதிப் பிரானை
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு
அணுவில் அணுவை அணுகலும் ஆமே.

***அணுவில் அணுவினை ஆதிப் பிரானை - படைப்பாற்றல் அணுவில்
அணுவாக உள்ளது, அது தொடக்க காலம் முதல் உள்ளது,
அணுவில் அணுவினை ஆயிரம் கூறு இட்டு - நுண்ணியதிலும்
நுண்ணிய அணுவினை ஆயிரம் பங்கிட்டு,
அணுவில் அணுவை அணுக வல்லார் கட்கு - அணுவில் அணுவை
அவற்றில் ஒன்றை அணுக வல்லோர்க்கு
அணுவில் அணுவை அணுகலும்
ஆமே - படைப்பாற்றல் அணுவை அணுகலாம்.
என்றுரைக்கிறார். அணுவின் அளவை கூறுகையில்
மேவிய சீவன் வடிவது சொல்லிடின் , கோவின் மயிர் ஒன்று நூறுடன்
கூறிட்டு, மேவிய கூறு அது ஆயிரம் ஆயினால் ,
ஆவியின் கூறு நூறாயிரத்தில் ஒன்றே, 

- திருமூலர் -

படைப்பாற்றலின் வடிவத்தை சொல்வதென்றால் மாட்டின் தோலிலுள்ள முடியை நூறு
பங்காக வெட்டி, வெட்டிய ஒரு பங்கு முடியை ஆயிரம் கூறாக வெட்டி,
அக்கூற்றில் ஒரு கூற்றை ஒரு நூறாயிரம் பங்காக வெட்டினால்
அதில் கிடைக்கும் ஒரு பங்கிலும் அவர் வடிவத்தை காணலாம் என
கூறுகிறார்.

சரி அவரின் கணக்கு படி
1. 1 முடி÷ 100 = 1/100 முடி
2. 1/100 முடி ÷ 1000 = 1/1000 முடி
3. 1/100000 முடி ÷ 100000 முடி = 1/
10000000000 (0.00000000001)

அப்படியெனில் மாட்டு தோலிலுள்ள முடியின் நீளம் இயல்பாக 5 mm
இருக்கும். அதை ஆயிரம் கோடி பங்காக வெட்டினால் கிடைக்கும்
ஒரு முடியின் பங்கு. இங்கு ஒரு அணுவின் எடை அல்லது அதன்
வடிவத்தின் அளவு என கூறியுள்ளார். இவ்விடம் அணு
என்பது நுண்மையானது என்பது திருமூலருக்கு தெரிந்துள்ளது.
இதை போல வள்ளலார் தனது அருட்பாவில் " பிரியும் வகையும்"
பிரியாவகையும் தெரிந்தாய் பின்னையே " என அணுவின்
அடிப்படை கொள்கையை தெளிவாக கூறுகிறார். அண்டப்பரப்பின் திறங்கள் அனைத்தும்
அறிய வேண்டியே ஆசைப்பட்ட தறிந்து தெரிந்தாய் அறிவைத் தூண்டியே
பிண்டத்துயிர்கள் பொருந்தும் வகையும் பிண்டம் தன்னையே.
பிரியும் வகையும் பிரியாவகையும் தெரிந்தாய் பின்னையே
எனக்கும் உனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ.

- திருஅருட்பா


மேலும் திருக்குறளை சிறப்பித்து கூறுமுகமாக இடைக்காட புலவர்
"கடுகை துளைத்தேழ் கடலைக் புகட்டி குறுக்கத் தரித்த குறள் "
என்று பாடினார். இதையே "அணுவைத் துளைத்தேழ் கடலைக் புகட்டி குறுக்கத் தரித்த
குறள்"என்றார் ஔவையார். கடுகானாலும் பிளந்துக்கொண்டே போனால் பிளக்கமுடியாத ஒரு சிறு துகள் (ATOM) இருக்கும். அதைப்  பிளக்கும் பொது பிரம்மாண்டமான சக்தி உண்டாகும். இதை அணுவியல் படித்தோர் அறிவர். அவ்வணுவையும் பிளக்க முடியும் என்று அறிவியல் நுட்பம் தற்போது நிறைந்துள்ளது.
இவ்வளவு நுட்பமான அணுவில் நிறைந்திருப்பது என்ன ? என்ற வினாவிற்கு தற்போதைய ஆய்வை களமாகக் கொண்டு பார்த்தால், அனுவைப்பிளந்து அவற்றின்
அளப்பெரிய ஆற்றலை நம் கண்டும் கேட்டும் ஆண்டுகள் பல கடந்து விட்டன. அணு ஒன்றைப் பிரித்துக் கொண்டு போகும்போது, அதனுள் காணப்படும் உப அணுத்துகள்கள்தான் (Subatomic Particles). அண்டம் தோன்றும் போது எவை உருவாகியனவோ, அவைதான் அணுவுக்குள்ளும் இருக்கின்றன. அணு என்பதைப்
பிரிக்க முடியாது என்னும் கருத்து ஆரம்பத்தில் விஞ்ஞானிகளிடையே
இருந்திருக்கிறது. ஆனால் இலத்திரன், புரோட்டான், நியூட்ரான் என்று அது பிரிக்கப்பட்டது. தொடர்ந்து நியூட்ரானும், புரோட்டானும் பிரிக்கப்பட்டன.
அப்படிப் பிரித்துப் பார்த்த போது, அவை இரண்டுக்குள்ளும் இருந்தவை
ஒரேவிதமான குவார்க்குகள் மட்டும்தான்.

அதாவது பூமியில் உள்ள அனைத்துமே குவார்க்குகளால் உருவானவைதான்.
இவற்றுக்குள் இருக்கும் ஆற்றலை ஆற்றை ஆய்ந்த போது இந்த வெட்டவெளி என்னும் பால்வெளி முழுவதும் நிறைந்துள்ள வெறும் சக்தியில் வெளிப்பாடே அணுவிற்குள்ளும் இருந்தது. அங்கே வெட்டவெளியும் இருந்தது. இந்த அகண்ட வெளியையும்
அணுவையும் இணைக்கும் மூலத்தை தேடி அலைந்த விஞ்ஞானிகள் கடந்த 1991 ஆம் ஆண்டு கண்டு கொண்டதே சரக் கோட்பாடு என்கின்ற (String Theory) விதியாகும்.
சரி அணுவை பற்றி இங்கு சொல்ல காரணம் தமிழர்கள் அணுவை பற்றி நன்கு அறிந்துள்ளனர்