Thursday, October 10, 2013

ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும்....

அது ஒரு மனநல மருத்துவமனை. அங்கே சிகிச்சை பெற்று வந்தார் ஒரு பட்டதாரி வாலிபர், ஒரு நாள் சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட, தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார்.

அவரின் இந்த வீரதீரச் செயல் மருத்துவமனை முழுக்க பரவிவிட்டது.

அதைக் கேள்விப்பட்ட மருத்துவ நிபுணர் அந்த பட்டதாரி வாலிபரை அழைத்து அழைத்துச் சென்னார்..

"உனக்கு ஒரு நல்ல செய்தியும், ஒரு துக்கமான செய்தியும் சொல்லப் போகிறேன்" என்றார்.

"சொல்லுங்க டாக்டர்"

"நீ உனது நண்பனைக் காப்பாற்றியபடியால் நீ சுகமடைந்து விட்டாய் என நினைக்கிறேன். நீ வீடு செல்லலாம். இது நல்ல செய்தி"

"துக்கமான செய்தி நீ கிணற்றில் இருந்து காப்பாற்றிய உனது நண்பன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துவிட்டான்"

அப்போது இடைமறித்த பட்டதாரி வாலிபர் சொன்னார்,

"டாக்டர் ... அந்த நோயாளி சாகவில்லை. கிணறில் விழுந்து நனைந்தவனை ஈரம் காயட்டும் என்று நான் தான் அவனது கழுத்தில் கயிற்றினைக் கட்டி மரத்தில் தொங்க விட்டிருக்கிறேன். ஈரம் காய்ந்ததும் அவன் சுகமாகிவிடுவான்".