Tuesday, May 26, 2015

தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள்

யாருக்காவது லேசான தலைசுற்றல் ஏற்பட்டாலே ரத்த அழுத்தம் பார்க்கிறோம். ஆனால் பழங்காலத்தில் கடவுள் முன்பாக, தரையில் உடல் உறுப்புகள் அனைத்தும் படும்படியாக விழுந்து கும்பிட்டு விட்டு எழுந்திருப்பார்கள். அப்படி எழுந்த பின்னர் சரியாக நிற்க முடிந்தால் உடலில் எந்த குறையும் இல்லை என்று அர்த்தம். கும்பிட்டு விட்டு எழுந்து நின்றவுடன் தடுமாற்றம் ஏற்பட்டால் ரத்த ஓட்டம் சரியான அளவில் இல்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஞாபக சக்தியைத் தூண்டும் நரம்புகளில் முக்கியமானவை காதின் நரம்பு வழியே செல்கின்றன. அந்த இடத்தில் அழுத்தம் தருவதால் ஞாபக சக்தி தூண்டபடுகிறது. அதனால் தான் அந்த காலத்தில் ஆசிரியர்கள், மாணவர்களின் காதை பிடித்து அழுத்தினர்! முன்பெல்லாம் படிக்க ஆரம்பிப்பதற்கு முன்பு காதை பிடித்துக் கொண்டு பிள்ளையாருக்கு தோப்புக் கரணம் போடுவார்கள். இதுவும் நினைவாற்றலைத் தூண்டும்.
இரண்டு உள்ளங்கைகள் மற்றும் இரண்டு உள்ளங்கால்களிலும் அக்குபிரஷர் செய்து வந்தால் எந்த நோயும் வராது. வந்த நோய்களும் படிபடியாகக் குறையும். உடல் இளைப்பதற்கும் அக்குபிரஷர் சிகிச்சை செய்யலாம். உள்ளங்கால், உள்ளங்கையில் குறிபிட்ட இடத்தில் பத்து வினாடிகள் அழுத்தினால் ஆறு மாதத்தில் பலன் தெரியும்.
உடல் இளைத்தாலும் அல்லது உடற்பயிற்சி, டயட்டை விட்டுவிட்டாலும் மீண்டும் எடை கூடி குண்டாகி விடுவோம். ஆனால் அக்குபிரஷர் சிகிச்சையில் உணவுக் கட்டுபாட்டுடன் இருந்தால் எடை கூடாது. உடல் இளைப்பதற்கு அக்குபிரஷர் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் காலங்களில் உடலுறவில் ஈடுபடக்கூடாது. அப்படி இருந்தால் கூடிய சீக்கிரமே நல்ல பலன் கிடைக்கும்.
14 முதல் 18 வயது வரை உள்ள பெண்கள் பலர் ஒற்றைத் தலைவலியால் அதிகமாக அவதிபடுகின்றனர். இந்த வயதில் அதிகமாக சுரக்கும் ஹார்மோன்களால் ஏற்படும் செக்ஸுவல் டென்ஷனால் இந்தத் தலைவலி ஏற்படுகிறது. சிலருக்கு சளியினால் முக்கடைபு ஏற்பட்டு அதனாலும் தலைவலி ஏற்படலாம். மலச்சிக்கல், மாதவிடாய் கோளாறுகளாலும் தலைவலி வரும். இவற்றை அக்குபிரஷர் முலம் குணபடுத்த முடியும்.
உச்சி முதல் பாதம் வரை மென்மையாக அக்குபிரஷர் செய்து கொண்டால் உடல் பருமன், தலைவலி, சைனஸ், ரத்தபோக்கு, வெள்ளைபடுதல், மூட்டுவலி, முழங்கால் வலி, இடுப்பு வலி, முழங்கை வலி, உயர் ரத்த அழுத்தம் போன்ற பெரும்பாலான பிரச்சினைகளை அக்குபிரஷர் முலம் தீர்த்து வைக்க முடியும். குறிப்பாக நினைவாற்றலை அக்குபிரஷர் மூலம் பெருக்கிக் கொள்ள முடியும்.
இந்த சிகிச்சையை டாக்டர் ஆலோசனைபடி மட்டுமே செய்ய வேண்டும்.