Wednesday, September 25, 2013

நண்பன்னா இப்பிடி இருக்கணும்....நன்பேண்டா......

அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பி கொண்டிருந்தேன்... டேய் மச்சி ... நான் சைதாப்பேட்டை பக்கமாதான் போறேன் ... அங்கே உன்னை டிராப் பண்ணிடுறேன் ... என் கூட பைக்ல வர்றியா?" வீட்டிற்கே வந்து அழைத்தான் என் நண்பன்.

நானும் நம்பி ஏறினேன்.

பாதி தூரம் வந்திருப்போம் ... வண்டி நின்று விட்டது.

"கொஞ்சம் இறங்கு"என்றவன், நான் இறங்கியதும் வேகவேகமாக இறங்கி, பின் சக்கரத்தின் காற்றை திறந்துவிட்டான்.

எனக்கு பகீரென்றது.

"டேய் ... என்னடா பண்ற?"

"ஒண்ணுமில்லை மச்சி ... வண்டியில பெட்ரோல் இல்லை"

அடுத்த பெட்ரோல் பங்க் ஒரு கிலோமீட்டர் தூரம் இருக்கும்.

"அதுக்கு ஏண்டா காற்றை திறந்து விட்ட? ... இப்போ வண்டிய தள்ளிட்டு போறதுக்குக்கூட கஷ்டமா இருக்குமே?"

"அது ஒண்ணுமில்ல மச்சி ... பெட்ரோல் இல்லாம ரோட்டுல வண்டிய தள்ளிட்டு போறத பார்க்குறவங்க கொஞ்சம் கேவலமா பார்ப்பாங்க ... ஆனால், பஞ்சர் ஆன வண்டிய தள்ளிட்டு போனா அய்யோ பாவம்னு நம்ம மேல பரிதாபமாப்படுவாங்க ... அதான்"

"அடக் கடவுளே ... வண்டியில பெட்ரோல் இல்லைன்னா என்னை ஏண்டா கூட்டிட்டு வந்த ... நான் பஸ்ல போயிருப்பேன்ல ... எனக்கு அவசரமா ஆபிஸ் போகணும்"

நக்கலாக‌ என்னைப்பார்த்து சிரித்தபடி சொன்னான்,

"நான் தனியா வண்டிய தள்ளிட்டு போக முடியுமா? ... அதனாலதான் ... ப்ளீஸ் ... கோவிச்சிக்காம கொஞ்சம் பின்னாடியே தள்ளிட்டு வாயேன்"