Wednesday, September 25, 2013

அதிசய டாக்டர்...

ஒரு ஊர்ல ஒரு ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்..

அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு..

எதை வேணாலும் குணமாக்குவேன்.. யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டாரு..

நம்ம ஆளு வியாவாரம் படுத்துடிச்சு.. என்னென்னமோ பண்ணிப்

பார்த்தாரு.. வேலைக்கு ஆகலே..!

ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி

” டாக்டர்அய்யா..! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது..” அப்படின்னாரு..

எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.

அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.

அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு..

அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு..

நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு.. உடனே அதிசய டாக்டர்.

” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்சி” ன்னாரு..!

நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே

திரும்பிட்டாரு..

இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே..
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு..

அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி

” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு

இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.

என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.

.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.

. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு..

திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர் ஜாடியை எடு”

ன்னாரு..

அப்ப கெளம்பி ஓடுனவர்தான்.... நம்ம ஆளு எங்க